நம் அடிவயிற்றில் வலது பக்கத்தில் சிறுகுடல் முடிந்து பெருங்குடல் தொடங்கும் இடத்தில் வால் போன்று இருப்பது தான் குடல்வால். ஆரம்ப காலத்தில் இந்த குடல்வால் பெரியதாக, தாவரங்களில் உள்ள செல்லுலோஸை செரிக்கத் தேவையான நொதியை சுரக்கும் பெரிய பணியைச் செய்து வந்தது. ஆனால் நாளடைவில் நமது மோசமான உணவுப் பழக்கவழக்கத்தால் இந்த குடல்வால் சுருங்கி சிறியதாகிவிட்டது. இன்னும் சில வருடங்களில் இந்த குடல்வால் உடலில் இருந்து மறைந்து கூட போகலாம். இத்தகைய குடல்வாலினால் எந்த ஒரு பயனும் நமக்கு இல்லாவிட்டாலும், அதில் சிறு பாதிப்பு ஏற்பட்டாலும், நம் உயிருக்கே ஆபத்து ஏற்படும் வாய்ப்புள்ளது. அப்படி குடல்வாலில் ஏற்படும் அழற்சியைத் தான் அப்பெண்டிக்ஸ் என்று அழைப்பார்கள். இந்த அப்பெண்டிக்ஸ் 5-25 வயதினரைத் தான் அதிகம் தாக்குவதாக புள்ளிவிவரத்தில் தெரிய வந்துள்ளது. சரி, இப்போது அப்பெண்டிக்ஸ் இருந்தால் என்ன அறிகுறிகள் தென்படும் என்று பார்ப்போம்.
* அடிவயிற்று வலி அப்பெண்டிக்ஸ் இருந்தால், முதலில் அடிவயிற்றில் வலியை உணரக்கூடும். அதிலும் இந்த வலியானது மிகவும் கடுமையாக, அடிவயிற்றின் வலது பக்கத்தில் இருக்கும். மேலும் இப்பிரச்சனை இருந்தால், அந்த வலி 6-24 மணிநேரத்திற்கு நீடித்திருக்கும்.
*அடிவயிற்றில் வீக்கம் அடிவயிற்று வலியுடன், உங்கள் அடிவயிறு வீங்கி காணப்படுமாயின், அதுவும் அப்பெண்டிக்ஸ் இருப்பதற்கான அறிகுறிகளுள் ஒன்று.
**குடல்வாலில் பாக்டீரியாக்களின் தாக்குதல் இருந்தால், அடிவயிற்றின் வலது பக்க வலியுடன், சில நேரங்களில் வாந்தியை எடுக்கக்கூடும். இப்படி நீங்கள் எப்போதாவது உணர்ந்தால், அது உங்களுக்கு அப்பெண்டிக்ஸ் உள்ளதென்பதற்கான அறிகுறியாகும்.

*உங்களுக்கு பசி எடுப்பதே இல்லையா? உணவைக் கண்டாலும் சாப்பிட வேண்டுமென்று தோன்றவில்லையா? அப்படியெனில் அது அப்பெண்டிக்ஸ் இருப்பதற்கான அறிகுறிகளுள் ஒன்று.
*குடலியக்க பிரச்சனை அப்பெண்டிக்ஸ் இருப்பவர்கள், மலச்சிக்கல் அல்லது வயிற்றுப்போக்கால் அவஸ்தைப்படுவார்கள். எனவே உங்களுக்கு குடலியக்க பிரச்சனை இருப்பின் உடனே மருத்துவரை அணுகுங்கள்.
*வயிற்றுப் பிடிப்புகள் வயிற்று வலியுடன், வயிற்றுப்பிடிப்புகள் அடிக்கடி ஏற்படுமாயின், நீங்கள் மருத்துவரை காண வேண்டிய நேரம் வந்துவிட்டது என அர்த்தம். நினைவில் கொள்ளுங்கள், வலி கடுமையாக தாங்க முடியாத அளவில் இருந்தால், தாமதிக்காமல் மருத்துவரை அணுகுங்கள். இல்லாவிட்டால் இறப்பை சந்திக்க வேண்டிவரும்.