கோவை நீதிமன்றத்தால கொலை வழக்கில் ஆயுள் தண்டனை வழங்கப்பெற்று உள்ள மேற்கு வங்கத்தை சேர்ந்த மஹபூப் அலிஎஞ்சினீயரிங் மானவர்(வயது 21) தற்போது புதுக்கோட்டைசிறையில் தண்டனை அனுபவித்து வரும் நிலையில் புதுக்கோட்டை தமுமுக சார்பில்வருடந்தோரும் புதுக்கோட்டை சிறையிலுள்ள அனைத்து கைதிகளுக்கும் புனித ரம்ஜான் பண்டிகையின் போது பிரியானி உனவு அனைவருக்கும் வழங்குவது வழக்கம்.அதனடிப்படையில் இந்த வருடமும் சிறைக்கு சென்ற போது சிறையின் சூப்பிரண்டு மற்றும்ஜெயிலர் விஸ்வநாதன் அவர்களும் மஹபூப் அலி அவர்களை நம்மிடம் அறிமுகம் செய்து இந்த பையன் ஒரு அப்பாவி எனவும் கோவை காவல்துறையும் எதிரிகளும் சேர்ந்து இவரை ஒரு பென் காதலித்ததாகவும் அந்த பென்னை இவர் கொன்று விட்டதாகவும் அந்த பென்னை அந்த பென்னின் குடும்பத்தாரே கொன்று பழியை இவர் மீது சுமத்தி இந்தி மொழியை தவிரவேறு மொழி எதுவும் தெரியாத இந்த அப்பாவி மானவரை இந்த பொய் வழக்கில் சிக்க வைத்து தண்டனை கொடுத்துள்ளதாகவும் இவருக்காக வாதாடிய வழக்கறிஞரும் எதிரியிடம் கையூட்டு பெற்று இவரை தப்பிக்கவிடாமல் செய்துள்ளதாகவும் நாம் விசாரனை செய்ததில் நமக்கு தெரிய வந்தது.நாம் உடனே மஹபூப் அலியின் உறவினர்கள் தொடர்பு என்னை பெற்று அவர்களை உடனே சந்தித்து சம்பந்தப்பட்ட வழக்கின் தீர்ப்பு நகலை பெற்றுக்கொண்டு தமுமுக மாநில தலைமைக்கு கடந்த 15 தினங்களுக்கு முன் சென்றோம். தலைமையின் வழிகாட்டுதலில் மூத்த தலைவர் ஹைதர் அலி அவர்களை சந்தித்து ஆலோசனை செய்தோம்.உடனே ஹைதர் சாப் அவர்கள் சென்னை உயர்நீதி மன்ற பிரபல வழக்கறிஞர் பா.புகழேந்தி அவர்களை தொடர்பு கொண்டு இந்த வழக்கை உடனே கையில் எடுக்குமாறும் பாதிக்கப்பட்ட அந்த மானவருக்கு நீதி கிடைக்க இந்த வழக்கை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யுமாறும் அறிவுறுத்தினார்கள்.
உடனே நாம் வழக்கறிஞரை அவரது அலுவலகத்தில் சந்தித்து தாமதம் செய்யாமல் மேல்முறையீடுசெய்வதற்க்குண்டான அனைத்து ஏற்ப்பாடுகளும்செய்து உள்ளோம்.தற்போது வழக்கு விசாரனைக்கு வந்துள்ளது.கடந்த 15 தினங்களாக தொடராக சென்னை சென்று வழக்கினை சந்தித்து வருகிறோம்.மஹபூப் அலியின் குடும்பத்தார் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளனர்.சாதாரன டைலர் குடும்பம்.5 சகோதரிகள் உள்ள நிலையில் 1 சகோதரிக்கு மட்டுமே திருமனம் முடிந்துள்ளது.அந்த குடும்பமே மஹபூப் அலியினை நம்பி உள்ள நிலையில் மஹபூப் அலியோ சிறையில்.வயதான தந்தை.நோயாளியான அம்மா,அன்றாட உனவுக்கே மிகவும் சிரமமான நிலையில் அந்த குடும்பம் தள்ளாடிக்கொண்டிருக்கிறது.ஏற்கனவே வாதாடிய வழக்கறிஞர் 3லட்ச ரூபாய்க்கு மேல் இவர்க்ளிடம் பெற்றுக்கொண்டு ஏமாற்றி விட்டார்.தற்போது வரை யாரிடமும் நாம் ஒருரூபாய் கூட வாங்காமல் இந்த வழக்கை கொண்டு செல்கின்றோம்.மேலும் இந்த வழக்கை நடத்த அதிகமான தொகை செலவாகும் என அறிகின்றோம்.
மொழிதெரியாமல் எப்படி இந்த வழக்கை எதிர்கொள்வது என்ற புரிதலும் இல்லாமல் அந்த குடும்பம் தத்தளித்த நிலையில் இறைவனால் நாம் அடையாளம் காட்டப்பட்டுள்ளோம்.இந்த செய்தியை வாசிக்கும் அனைவரும் இந்த குடும்பத்தின் மிக மோசமான கஷ்டத்தை போக்க உதவி செய்ய முன்வாருங்கள்.தாங்களால் முடிந்த உதவியை தாராளமாக செய்ய என்னை தொடர்பு கொள்ளுங்கள்.தயவு செய்து இந்த தகவலை மனிதாபிமானம் கொண்ட அனைத்து நன்பர்களுக்கும் கொண்டு செல்லுங்கள்.
எனது தொடர்பு என்;9942003552. இவன்Hமுஹம்மது சாதிக் மாவட்ட செயலாளர் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக்கழகம்.புதுக்கோட்டை