புதன், 31 ஆகஸ்ட், 2016

பெட்ரோல், டீசல் விலை கடும் உயர்வு

பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் நிலவரத்திற்கு ஏற்ப, எண்ணெய் நிறுவனங்கள் 15 நாட்களுக்கு ஒரு முறை பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன. அதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.38 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது., இதேபோல் டீசல் விலை ரூ.2.67 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.
கடந்த ஆகஸ்ட் 1–ந் தேதி, பெட்ரோல் விலை 89 காசுகளும், டீசல் விலை 49 காசுகளும் குறைக்கப்பட்டன. அதனைத்தொடர்ந்து ஆகஸ்ட் 15ம் தேதி பெட்ரோல் விலை ரூ.2¼ குறைக்கப்பட்டது. அதுபோல், டீசல் விலை 42 காசு குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Posts: