பெண்கள் புர்கா அணிந்து வகுப்புகளில் கலந்து கொள்ள கூடாது என கல்வி நிர்வாகம் எடுத்த இந்த முடிவுக்கு எதிர்ப்பு வலுத்துள்ளது. இஸ்லாமிய மாணவர்கள் கல்லூரியில் புர்கா அணிவது அவர்களது அடிப்படை உரிமை, நிர்வாகம் தங்கள் மதத்தின் உரிமையை மறுக்கிறது என மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் இந்த முடிவுக்கான சரியான விளக்கத்தினை கல்லூரி நிர்வாகம் இதுவரை அளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
பதிவு செய்த நாள் : August 27, 2016 - 06:48 PM