தெலங்கானா மாநிலத்தில் உள்ள கரீம்நகரைச் சேர்ந்த வித்யாசாகர் ராவ், ஹைதராபாத்தில் பிஎஸ்சி கல்லூரிப் படிப்பை முடித்த பின்னர் சட்டப் படிப்பையும் முடித்தார்.
சிறிது காலம் வழக்கறிஞராக பணியாற்றிய வித்யாசாகர் ராவ், 1972-ல் கரீம்நகர் மாவட்ட ஜனசங்கத்தின் தலைவராக இருந்தார்.
மெட்பள்ளி சட்டமன்றத் தொகுதியில் இருந்து பாஜக சார்பில் ஆந்திர சட்டப்பேரவைக்கு 1985-ல் தேர்வு செய்யப்பட்டார்.
1998-ல் கரீம் நகர் தொகுதியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.
மேலும், 1998-ல் ஆந்திரப் பிரேதச பாஜக தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.
கடந்த 1999-ம் ஆண்டு, வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசில் உள்துறை இணை அமைச்சராக பொறுப்பேற்று தேசிய அரசியலில் அறிமுகமானார்.
பின்னர், அதே ஆண்டில் இலாகா மாற்றப்பட்டு வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சராக பணியாற்றினார்.
2014 ஆகஸ்ட் மாதம், வித்யாசாகர் ராவ் மகாராஷ்டிர மாநில அளுநராக நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகிறார்.
தற்போது, தமிழக ஆளுநராக கூடுதல் பொறுப்பேற்றுள்ளார்.