செவ்வாய், 23 ஆகஸ்ட், 2016

25 ஆண்டுகள் ஆகிறது. தெரியுமா உங்களுக்கு ?

நீங்கள் பயன்படுத்தி கொண்டிருக்கும் இன்டெர்நெட்டை ஒருநாள் முழுவதும் பயன்படுத்தாமல் இருப்பீர்களா..?
சிலருக்கு சற்று கடினம் தான். பலருக்கு அது சாத்தியமே இல்லை.
இன்று இன்டெர்நெட் பிறந்து 25 ஆண்டுகள் ஆகிறது. தெரியுமா உங்களுக்கு ?
1991 ஆம் ஆண்டு ஆக்ஸ்ட் 23 ந்தேதி பிரிட்டிஷ் விஞ்ஞானி டிம் பெர்னர்ஸ் லீ , World Wide Web என்கிற உலகளாவிய வலையமைப்பை உருவாக்கி பயன்பாட்டுக்கு கொண்டுவந்தார்.
முன்னதாக, 1989ல் ஐரோப்பிய ஆராய்ச்சி அமைப்பான CERN-ல் , லீ வலையமைப்பை உருவாக்கினாலும், அதனை பொது பயன்பாட்டிற்கு கொண்டுவந்தது இந்த தினத்தில் தான்.
1993 ல் வணிகப்பயன்பாட்டுக்குள் இன்டெர்நெட் களமிறங்கியது.
லீயின் முயற்சி அன்று நிறைவேறவில்லை எனில், இன்று நீங்கள் பார்க்கும் ஃபேஸ்புக்கை நினைத்துக்கூட பார்த்திருக்க முடியாது.
பலருக்கு பிழைப்பும், உலகளாவிய தொடர்புக்கும் இன்றியமையாத ஒன்றாகி விட்டது இன்டெர்நெட் இன்று.
அதற்காக தான் என்னவோ, இன்று எல்லோரின் ஃபேஸ்புக் பக்கத்திலும், லீ-க்கு நன்றி தெரிவித்து இன்டெர்நெட்டை கொண்டாடும் பதிவை நம் கண் முன்னால் நிறுத்தியிருக்கிறது ஃபேஸ்புக் நிறுவனம்.