#ஒட்டக_குர்பானிக்கு_தடை_விலக_அரசு_உதவ_வேண்டும்!
#உருது_அகாடமி_சீரமைக்கப்பட_வேண்டும்!
#முஸ்லிம்களுக்கு_இட_ஒதுக்கீடு_அதிகரிக்கப்பட_வேண்டும்!
#வக்பு_வாரியத்திற்கு_தீர்ப்பாயம்_தேவை!
பாகம்_1
மாண்புமிகு பேரவை தலைவர் அவர்களே....
பக்ரீத் பண்டிகை என்னும் தியாகத்திருநாள் உலகமெங்கும் கொண்டாப்படுகிறது. இது நரபலியை ஒழித்து அதற்கு பகரமாக விலங்குகளை பலியிடும் நோக்கத்தில் ஆடு,மாடு,ஒட்டகங்கள் குர்பானி கொடுக்கப்படுகிறது.
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் அண்மையில் அளித்த இடைக்கால தீர்ப்பில், "ஒட்டகம் அறுக்கும் வகையில் இடம் (SLAUGHTER HOUSE) இங்கு இல்லை" என்பதை காரணம் காட்டி ஒட்டக குர்பானிக்கு இடைக்கால தடை விதிப்பதாக கூறியுள்ளது.
கடந்த பல ஆண்டுகளாக ஆந்திராவிலிருந்து லாரிகளில் ஒட்டகங்கள் கொண்டு வரப்பட்டு குர்பானி கொடுக்கப்படுகிறது. வியாபாரத்திற்காக அறுக்கப்படும் பிராணிகளுக்குத்தான் SLAUGHTER HOUSE என்னும் அறுக்கும் இடம் அவசியம்.
அதே சமயம் இது மத சடங்குகளை நிறைவேற்றுவதற்கோ, மக்களின் சொந்த தேவைகளுக்கான பயன்பாட்டிற்கோ இது அவசியமில்லை. அதனால்தான் எனது சகோதர மக்கள் தங்களின் மத நம்பிக்கைகளின் படி கோயில்களில் கால்நடைகளை வெட்டுவதற்கு சட்டம் அனுமதிக்கிறது.
மேலும் மிருகங்களை வதை செய்யக்கூடாது என்பதற்காக உருவாக்கப்பட்ட மிருகவதை தடை சட்டம் 28-வது பிரிவு மத நம்பிக்கைக்கு விலக்களித்துள்ளது.
எனவே இது முஸ்லிம்களின் மத நம்பிக்கை சார்ந்த உணர்வு பூர்வமானது என்பதை இங்கே நான் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.
மேலும் முஸ்லிம் சமுதாயத்தின் மீது பாசமும் அன்பும் கொண்ட மாண்புமிகு முதல்வர் அம்மா அவர்கள் இவ்விசயத்தில் தலையிட்டு தீர்வு காண வேண்டும். ஒட்டகங்களை அறுப்பதற்கு மாநகராட்சி, நகராட்சிகளில் இடங்களை ஒதுக்கி, இதனை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, ஒட்டகங்களை குர்பானி கொடுக்க ஏற்பாடு செய்து தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.
(உரையின் இதரப்பகுதிகள் பிறகு வெளியிடப்படும்.)
தகவல்;
மஜக ஊடகப் பிரிவு (சென்னை)