ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2016

வட தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

வட தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில நேரங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.