ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2016

பான் கார்டு ஏன் அவசியம்?

Pan1
பண வரவு செலவுகளைப் பராமரிக்கும் எல்லோருமே பான் கார்டு வைத்துக் கொள்ள வேண்டும். உங்கள் வருமானத்துக்கான டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படும்போது உங்களுக்கு சம்பளம் கொடுக்கும் நிறுவனம் அந்த டி.டி.எஸ் தொகையை வருமான வரித் துறைக்குச் செலுத்த வேண்டும். அப்படி அந்த நிறுவனங்கள் நமக்கான பிடித்தம் செய்த தொகையைச் செலுத்தியிருக்கிறார்களா? அந்தத் தொகை கணக்குக்கு வந்திருக்கிறதா என்பதை உறுதி செய்துகொள்ள பான் எண் உபயோகப்படும். நாம் வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்யும்போது இந்த எண்ணைக் கொண்டு அந்த டி.டி.எஸ். தொகையைக் குறிப்பிட்டு வருமானவரி வரம்புக்குள் நாம் இருந்தால் அதை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.
· வருமானக் கணக்குகளைத் தாண்டி அடையாளச் சான்றுக்காகவும் இருப்பிடச் சான்றுக்காகவும் இந்த பான்கார்டு பயன்படுகிறது
· ரூ.5 லட்சம் அதற்கு மேல் அசையா சொத்துகள் வாங்கும் போது அல்லது விற்கும் போது அவசியம்.
· ரூ.50,000/-க்கு மேல் வங்கி மற்றும் அஞ்சலக சேமிப்பு-களில் நிலையான வைப்புத் தொகையினை சேமிக்கும் போது அவசியம்.
· அஞ்சலக சேமிப்பு வங்கி கணக்கில் வைக்கப்படும்நிலையான வைப்புத் தொகரூ.50,000 தாண்டும் போது அவசியம்.
· வங்கி கணக்கு துவங்கும் போது, தொலைபேசி, செல்போன் இணைப்பு பெற விண்ணப்பிக்கும் போது, தங்கும் விடுதி மற்றும் உணவு விடுதிக்கு செலுத்தும் கட்டணம் ரூ. 25,000/- மிகும் போது அவசியம்.
· ஒரு நாளில் வங்கியில் பெறப்படும் டிடி அல்லது வங்கி காசோலையின் மொத்த தொகை ரூ.50,000/- க்கு அதிகமாக செலுத்தும் போது அவசியம்.
· வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்ய அவசியம்.
· சேவை வரி மற்றும் வணிக வரிதுறையில் பதிவு சான்று பெற கட்டயமாகும்.
· முன்பு, மியூச்சுவல் ஃபண்டில் எவ்வளவு குறைந்த பணத்தை முதலீடு செய்தாலும் பான்கார்டு எண்ணை குறிப்பிட வேண்டும்.
· மேலும், மைனர் பெயரில் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும் போது, பான் கார்டு எண்ணை சமர்ப்பிக்க வேண்டும். இதற்காக, தற்போது மைனர்களுக்கும் பான் கார்டு வழங்கப்படுகிறது.