1992 ம் ஆண்டு இந்தியா தேசத்தின் மதசார்பின்மையை பறிக்கும் விதமாக ஜனநாயகங்களுக்கு எதிராக இஸ்லாமியர்களின் வணக்க வழிபாட்டு தளமான பாபர் மஸ்ஜித் சங்பரிவார கும்பல்களால் இடிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து சங்பரிவார சக்திகளால் தமிழகத்தில் இஸ்லாமியர்கள் மீதான தொடர் தாக்குதல்களும்,
வணிக வளாகங்கள் மீது வன்முறைகளையும் கட்டவிழ்த்து விட்டனர்.
வணிக வளாகங்கள் மீது வன்முறைகளையும் கட்டவிழ்த்து விட்டனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இஸ்லாமிய மக்களுக்கு எதிரான சூழலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசின் மெத்தனப்போக்கால் சில விரும்பத்தகாத சம்பவங்கள் தமிழகத்தில் நடைபெற்றது.
அதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் நூற்றுக்கணக்கான அப்பாவி இளைஞர்களை கைது செய்து சிறைச்சாலையில் அடைத்தது தமிழக அரசு.
அப்பாவிகளுக்கும் வழக்கில் சம்பந்தமே இல்லாத இஸ்லாமிய இளைஞர்களுக்கு நீதி கிடைக்காமல் அநீதி இழைக்கப்பட்டு படித்த பட்டதாரிகளுக்கு கூட சிறைவாசிகள் என்ற பட்டமளிக்கப்பட்டது.
ஆயுள் தண்டனை விதிக்கக்கப்பட்டு இருபது ஆண்டுகளுக்கும் மேலாக தங்கள் குடும்பங்களையும்,இன்பமான இந்த உலக வாழ்க்கையும் இழந்து வாடுகிறார்கள்(மறுமையில் இன்ஷா அல்லாஹ் கூலி கிடைக்கும்).
தமிழக அரசு அண்ணா பிறந்தநாள்,எம்.ஜி.ஆர் பிறந்தநாள் போன்ற தினங்களில் ஆயுள் சிறைவாசிகளை நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்வது வழக்கமாக இருந்தது.
இவர்களை விடுவிக்க அரசியலமைப்பு சட்டம் 161 பயன்படுத்தப்படுகிறது.அதாவது மாநில அரசு நினைத்தால் யாரை வேண்டுமானாலும் விடுதலை செய்ய அதிகாரம் வழங்கப்படும் சட்டம்.
ஆனால் ஆளும் அதிமுக அரசாங்கம் கடந்த ஆட்சியில் ஒரு சிறைவாசியை கூட விடுதலை செய்யவில்லை.
இது குறித்து சென்ற முறை சட்டமன்றத்தில் பலமுறை மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லாஹ்,
அஸ்லாம் பாஷா,
இந்த முறை முஸ்லிம் லீக்கை சேர்ந்த அபுபக்கர்,
மஜக பொது செயலாளர் அன்சாரி போன்றவர்கள் பேசிய போது இதற்கு பதிலளித்த அமைச்சர்கள் சுப்ரமணிய சுவாமி தாக்கல் செய்த வழக்கு நிலுவையில் உள்ளதாக கூறினர்.

இதனால் இந்த வழக்கு முடியும் வரை விடுதலை செய்ய இயலாது என்று தங்கள் பதிலுரையில் தெரிவித்தனர்.
தற்போது இந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்து சிறைவாசிகளை நன்னடத்தை அடிப்படையில் விடுவிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.
எனவே வருகின்ற அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு தமிழக சிறைச்சாலையில் உள்ள முஸ்லிம் சிறைவாசிகளை விடுவிக்க தமிழக அரசு முன் வரவேண்டும்.
இதற்கு முதற்கட்டமாக ஏற்கனவே நன்னடத்தை அடிப்டையில் விடுவிக்க பரிந்துத்தை செய்து நிலுவையில் உள்ள
குன்டு ஜாக்கீர் பிரஸ் அபு அமானுல்லாஹ் போன்றவர்களையும்,நோய்வாய்ப்பட்டுள்ள அபுதாகீர்,திண்டுக்கல் மீரான் மைதீன் போன்றவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குன்டு ஜாக்கீர் பிரஸ் அபு அமானுல்லாஹ் போன்றவர்களையும்,நோய்வாய்ப்பட்டுள்ள அபுதாகீர்,திண்டுக்கல் மீரான் மைதீன் போன்றவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக மக்களின் மீது அக்கறை கொண்ட,
குறிப்பாக பெண்களின் நலன் மீது அதிகமாக அக்கறை கொண்ட தமிழக முதல்வர் அவர்கள் அந்த சகோதரர்களின் குடும்பங்களை கருணையோடு பார்த்து அவர்களின் விடுதலைக்கு வித்திட வேண்டும்.
குறிப்பாக பெண்களின் நலன் மீது அதிகமாக அக்கறை கொண்ட தமிழக முதல்வர் அவர்கள் அந்த சகோதரர்களின் குடும்பங்களை கருணையோடு பார்த்து அவர்களின் விடுதலைக்கு வித்திட வேண்டும்.
எங்களுக்கு தாலிக்கு தங்கம் வேண்டாம்.தாலிகள் அறுபடும் முன் எங்கள் கணவனை எங்களிடம் ஒப்படையுங்கள் என்று எங்கள் சகோதரிகள் கேட்கிறார்கள்.
இவர்களின் கண்ணீர்களுக்கு பதிலளிக்கும் விதமாக,
வாழ்விழந்தவர்களுக்கு புது வாழ்வு அளிக்கும் விதமாக இந்த அண்ணா பிறந்தநாளில் இஸ்லாமிய மக்களுக்கு அன்பு பரிசாக சிறைவாசிகள் விடுதலை என்ற அறிவிப்பு வெளிவரும் என்று நம்புகிறோம்.
வாழ்விழந்தவர்களுக்கு புது வாழ்வு அளிக்கும் விதமாக இந்த அண்ணா பிறந்தநாளில் இஸ்லாமிய மக்களுக்கு அன்பு பரிசாக சிறைவாசிகள் விடுதலை என்ற அறிவிப்பு வெளிவரும் என்று நம்புகிறோம்.