புதன், 24 ஆகஸ்ட், 2016

மியான்மரின் ரோஹிங்கியா இஸ்லாமியர்கள் மீதான மனித உரிமை மீறல்கள் விவகாரத்தைக் கவனிக்கும் மனித உரிமை அமைப்பின் தலைவராக ஐ.நா. அமைப்பின் முன்னாள் பொதுச்செயலாளர் கோபி அனான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நீண்டகாலமாக ராணுவ ஆட்சி நடந்துவந்த மியான்மரில் சமீபத்தில் ஜனநாயகம் மலர்ந்தது. இதையடுத்து ரக்‌ஷீன் மாகாணத்தில் புத்த மதத் துறவிகளுக்கும், சிறுபான்மை ரோஹிங்கியா இஸ்லாமிய சமூகத்தினருக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதலைத் தவிர்க்கவும், அங்கு நடக்கும் மனித உரிமை மீறல்களைக் கட்டுப்படுத்தவும் மனித உரிமை கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கமிட்டிக்குத் தலைவராக கோபி அனானை மியான்மர் அரசு நியமித்துள்ளது.