புதன், 31 ஆகஸ்ட், 2016

‌பகிரப்படும் வாட்ஸ்அப் பயனாளிகள் தகவல்கள்: அரசிடம் விளக்க‌ம் கேட்டது நீதிமன்றம்

வாட்ஸ்அப் பயன்படுத்துபவர்களின் தனிப்பட்ட தகவல்கள் ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு தரப்பட உள்ள நிலையில் இது குறித்த மத்திய அரசின் விளக்கத்தை டெல்லி உயர் நீதிமன்றம் கேட்டுள்ளது.
இவ்விவகாரம் குறித்து விளக்கமான தகவல்களுடன் வரும் 14-ம் தேதிக்குள் அறிக்கை தர வேண்டும் என நீதிபதிக‌ள் ரோஹிணி மற்றும் சங்கீதா திங்ரா ஆகியோர் மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர். வாட்ஸ்அப் நிறுவனம் தனது பயனாளிகளின் தனிப்பட்ட தகவல்களை தாய் நிறுவனமான ஃபேஸ்புக்குக்கு தர உள்ளது. இந்த நடைமுறை ‌வரும் 25-ம் தேதி முதல் அமலுக்கு வரும் எனத் தெரிகிறது. இந்நிலையில் வாட்சப்பின் இந்த முடிவு பயனாளிகளின் தனிப்பட்ட உரிமைகளை மீறும் செயல் என்றும் இந்த நடவடிக்கை ஆபத்தை விளைவிக்க கூடியது என்றும் கூறி கர்மன்ய சிங் சரீன் மற்றும் ஷ்ரேயா சேத்தி ஆகிய இருவர் ‌வழக்கு தொடர்ந்திருந்தனர்.