ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2016

இயற்கையின் பரிசு நுங்கு தரும் நன்மைகள்

பனைமரத்தின் பரிசான நுங்கு, பல நன்மைகளை அள்ளி வழங்குகிறது.
நுங்கு குளிர்ச்சியூட்டக் கூடியது. இதற்கு கொழுப்பை கட்டுபடுத்தி உடல் எடையை குறைக்கும் தன்மை அதிகம்.
நுங்குநீர் வயிற்றை நிரப்பி பசியைத் தூண்டும். இதனால் சாப்பிடப்பிடிக்காமல் இருப்பவர்களுக்கு நல்ல பசி ஏற்படும்.
மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப் போக்கு இரண்டுக்குமே நுங்கு சிறந்த மருந்து.
10
ரத்த சோகை உள்ளவர்கள் நுங்கைத் தொடர்ந்து சாப்பிட்டால் விரைந்து குணமாகி உடல் சுறுசுறுப்பாகும்.
நுங்கில் “அந்த்யூசைன்” எனும் ரசாயனம் இருப்பதால் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய்க் கட்டிகள் வருவதைத் தடுக்கும்.
வெயில் காலத்தில் அம்மை நோய்கள் வருவதை தடுத்து, உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தரும்.
கோடை காலத்தில் ஏற்படும் வியர்க்குருக்கள் மீது நுங்கைத் தடவினால் அவை மறைந்து விடும்.
நுங்கில் வைட்டமின் ஏ,பி,சி, இரும்புச்சத்து, பாஸ்பரஸ், பொட்டாசியம், போன்ற உடலுக்குத் தேவையான அத்தியாவசிய சத்துக்கள் நிறைந்து இருக்கின்றன.
கோடை காலத்தில் உடம்புக்கு தேவைப்படும் சர்க்கரையையும் தாதுப்பொருட்களையும் சரிசம அளவில் கொடுக்கக் கூடியது. எனவே கோடைக்கு ஏற்ற வரப் பிரசாதமாக விளங்குகிறது