விழுப்புரம் மாவட்டத்தில் ஈமச்சடங்கு நிதியுதவி பெற லஞ்சம் கேட்டதாக புகார் தெரிவிக்கப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் பணியிலிருந்து திரும்பப் பெறப்பட்டுள்ளார்.
எம்.குன்னத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கொளஞ்சி என்பவர் இரண்டு சிறுநீரகமும் பாதிக்கப்பட்டு கடந்த ஆண்டு இறந்தார். இவரது குடும்பத்தினர் அரசு வழங்கும் ஈமச்சடங்கு நிதியை பெறுவதற்காக கிராம நிர்வாக அலுவலர் சுப்ரமணியிடம் கையெழுத்து கேட்டபோது, அவர் 3 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் வெறுப்படைந்த கொளஞ்சியின் கடைசி மகன் அஜீத்குமார், உளுந்தூர்பேட்டை கடைத்தெருவிலும் பேருந்திலும் பிச்சை எடுத்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை கோட்டாட்சியர், சுப்ரமணியை பணியிலிருந்து திரும்பப் பெற்று உத்தரவிட்டுள்ளார்.
August 27, 2016 - 08:20 PM