தற்போது அனைவரும் ஆரோக்கியமற்ற உணவுகளைத் தான் அதிகம் சாப்பிடுகிறோம். அதுமட்டுமின்றி, இந்த உணவுகளின் மூலம் அத்தியாவசிய சத்துக்கள் கிடைப்பதை விட, நச்சுக்கள் தான் அதிகம் சேர்கிறது. இதனால் உணவுக்கால்வாய் சிக்கல்கள் அதிகரித்து, அதனால் குடல் நோய்களுக்கு உள்ளாகிறோம். குடல்கள் ஆரோக்கியமாக செயல்பட தவறாமல் பின்பற்ற வேண்டியவைகள்! ஆரோக்கியமற்ற செரிமானத்தினால், உடலில் பல்வேறு டாக்ஸின்கள் மற்றும் பூச்சிக் கொல்லிகள் சேர்கிறது. ஆனால் நல்ல ஊட்டச்சத்து நிறைய உணவுகளை உட்கொண்டு வந்தால், அதன் மூலம் செரிமான பிரச்சனைகள் நீங்குவதோடு, குடலில் தேங்கியுள்ள நச்சுக்களும் வெளியேறி, குடல் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கலாம். அப்பெண்டிக்ஸ் என்னும் குடல்வால் அழற்சி இருப்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்!!! முக்கியமாக உடலில் எந்த ஒரு நச்சுக்களும், கழிவுகளும் இல்லாவிட்டால், உடல் நன்கு புத்துணர்ச்சியுடனும், லேசாக இருப்பது போன்றும் உணரக்கூடும். அதிலும் குடலை சுத்தம் செய்யும் உணவுகளை உட்கொண்டு வந்தால், குடல் சுத்தமாவதோடு, உடலின் ஆற்றல் அதிகரித்து, கவனச்சிதறல் ஏற்படுவதையும் தடுக்கலாம். மேலும் உடலின் pH அளவு சீராக இருப்பதோடு, கருத்தரிக்கும் பிரச்சனை இருந்தால் நீங்கிவிடும். குடலில் உள்ள ஒட்டுண்ணிகளை இயற்கையான வழியில் அழிக்க உதவும் உணவுகள்!!! சரி, இப்போது குடலில் தேங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவும் உணவுப் பொருட்கள் என்னவென்று பார்ப்போமா!!!
தானியங்கள் தானியங்களை உணவில் சேர்ப்பதன் மூலம் குடல் சுத்தமாகும். ஏனெனில் தானியங்களில் நார்ச்சத்துக்கள் அதிகமாகவும், கலோரிகள் மற்றும் கொலஸ்ட்ரால் குறைவாகவும் உள்ளது. இதனால் செரிமானம் சீராக நடைபெற்று, குடலும் சுத்தமாக இருக்கும்.
க்ரீன் டீ தினமும் ஒரு கப் க்ரீன் டீ குடித்து வந்தால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், குடலியக்கத்தை சீராக்கி, குடலை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும். எனவே தவறாமல் க்ரீன் டீ குடிக்கும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.
எலுமிச்சை சிட்ரஸ் பழமான எலுமிச்சையில் க்ளின்சிங் தன்மை இருப்பதால், அவற்றை உணவில் சேர்ப்பதன் மூலம், உடலில் தேங்கும் டாக்ஸின்கள் மற்றும் கொழுப்புக்களை அவ்வப்போது கரையச் செய்து, செரிமான மண்டலம் மற்றும் குடலை நச்சுக்களின்றி ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும்.
பச்சை இலைக்காய்கறிகள் பச்சை இலைக்காய்கறிகள் குடலை சுத்தம் செய்ய உதவுவதோடு, செரிமான பாதைகளில் எவ்வித நோய்களும் தாக்காமல் பாதுகாப்பு அளிக்கும். எப்படியெனில் பச்சை இலைக்காய்கறிகள் பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்கும் குணம் கொண்டது. ஆகவே இவற்றை உட்கொள்வதால், குடலில் பாக்டீரியாக்கள் இருந்தாலும், அவை வெளியேறிவிடும்.
அவகேடோ அவகேடோ கூட குடலை சுத்தம் செய்யும் குணம் கொண்டது. மேலும் இதில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் இருப்பதால், அவை குடல் சுவர்களில் ஓர் படலத்தை உருவாக்கி, டாக்ஸின்கள் தங்காமல் தடுக்கும்