புதன், 31 ஆகஸ்ட், 2016

தமிழகத்தில் அதிகரித்து வரும் பெண் கொலைகள்! திருச்சி சமயபுரத்தில் மீன்டும் ஒரு மாணவி கொலை!

திருச்சி: திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே கல்லூரி மாணவி மோனிஷாவுக்கு கத்திகுத்து ஏற்பட்டது. கொள்ளிடம் காவல் நிலையம் அருகே மாணவியை கத்தியால் குத்திய பாலமுருகன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். தமிழகத்தில் ஒருதலைக்காதலால் இளம்பெண்கள் அடித்துக்கொலை செய்யப்படுவதும், வெட்டிக்கொல்லப்படுவதும் அதிகரித்துள்ளது. சென்னை சுவாதி, விழுப்புரம் நவீனா படுகொலைகளால் ஏற்பட்ட அதிர்ச்சி நீங்குவதற்கு முன்பாகவே கரூரில் பொறியியல் மாணவி சோனாலி கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கிறார்.
College girl stabbed near Trichy
அந்த அதிர்ச்சி சம்பவம் நீங்கும் முன்பாக இன்று காலையில் தூத்துக்குடியில் பள்ளி ஆசிரியை பிரான்சினா என்பவர் ஒருதலைக்காதலால் தேவாலயத்தில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். காலை முதலே கொலை சம்பவங்கள் பற்றிய செய்திகள் இடம் பெற்று வரும் நிலையில் திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது. பிச்சாண்டார்கோவில் பகுதியை சேர்ந்த மோனிஷாவின் தாய் பாத்திமா இன்ஸ்பெக்டராக உள்ளார். இன்று மாலை 5 மணியளவில் மாணவி மோனிசா, சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பாலமுருகன் என்பவர், மாணவியை கத்தியால் குத்திவிட்டு தன் கையில் இருந்த விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார். இதனையடுத்து அங்கிருந்தவர்கள் மாணவி மோனிஷாவையும், கத்தியால் குத்திய பாலமுருகனையும் துறையூரில் உள்ள மருத்துவமனையில் சிகிக்சைக்காக அனுமதித்துள்ளனர்.

Source: Kaalaimalar

Related Posts: