வளி மண்டல ஆக்சிஜனை நேரடியாக எடுத்துக்கொண்டு, திரவ ஹைட்ரஜன் ஆற்றல் மூலமாக செல்லும் ராக்கெட் என்ஜின் சோதனை வெற்றியடைந்தது.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விஞ்ஞானிகள் இதை விண்ணில் செலுத்தினர். குறைந்த எரிபொருளை பயன்படுத்தி அதிக எடை கொண்ட செயற்கைக் கோள்களை இதன் மூலம் விண்ணில் செலுத்த முடியும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
அமெரிக்கா, பிரிட்டனை தொடர்ந்து, இந்த சோதனையில் வெற்றி பெற்ற 3-வது நாடு என்ற பெருமை இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. ராக்கெட் என்ஜின் சோதனை வெற்றி பெற்றதற்கு குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
பதிவு செய்த நாள் : August 28, 2016 - 08:17 AM