புதன், 24 ஆகஸ்ட், 2016

மன்னிப்பு கேட்கும் பேச்சுக்கே இடமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.


மன்னிப்பு கேட்கும் பேச்சுக்கே இடமில்லை - ரம்யாபாகிஸ்தானை புகழ்ந்து பேசியதற்காக நடிகை ரம்யா மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யுமாறு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனினும் பாகிஸ்தான் குறித்த தனது கருத்துக்காக மன்னிப்பு கேட்கும் பேச்சுக்கே இடமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், நடிகையுமான ரம்யா, பாகிஸ்தான் ஒரு நல்ல நாடு, நம்மைப் போன்ற மனிதர்கள் தான் அங்கும் வாழ்கிறார்கள் என பேட்டி அளித்தார். மத்திய அமைச்சர் மனோகர் பாரிக்கர் கூறுவது போல் பாகிஸ்தான் நரகம் அல்ல என்றும் அங்கும் நம்மைப் போன்ற மக்களே வாழ்ந்து வருகிறார்கள் என்றும் தெரிவித்திருந்தார்.

இதற்காக வழக்கறிஞர் ஒருவர், ரம்யா மீது புகாரளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் ரம்யா மீது வழக்குப்பதிவு செய்யுமாறு மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை வரும் 27-ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகை ரம்யா, பாகிஸ்தானை புகழ்ந்து பேசியதற்காக மன்னிப்பு கேட்கும் பேச்சுக்கே இடமில்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.






ANI  @ANI_news
Its really sad but such is situation in country today: Ramya on complaint filed against her for her statement on Pakpic.twitter.com/YGqYKFgVON
Everybody is entitled to their views and that is what democracy is about,you can't force your ideology on anyone: Ramya,Ex-Congress MP