வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள் !
2016-17-ம் ஆண்டிற்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக் கெடு நாளையுடன் (ஆகஸ்ட் 05-ந்தேதி) முடிவடைகிறது.
வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை தலைமை அலுவலகத்தில் 7 சிறப்பு கவுண்ட்டர்கள் 28 ந்தேதி திறக்கப்பட்டன.
இதில், ஒரு கவுண்ட்டர் காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்ட வருமான வரித்தாரர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
ரூ.250 கட்டணத்தில் ஆன்-லைன் மூலம் வருமான வரியை கணக்கு தாக்கல் செய்யவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வருமான வரி செலுத்துதல், கணக்கு தாக்கல் செய்தல் போன்றவற்றில் ஏற்படும் சந்தேகங்களுக்கு விளக்கம் பெற சேவை மையமும் திறக்கப் பட்டுள்ளது.
இணையதளத்தின் வாயிலாக அதிகப்படியானவர்கள் வருமான வரி தாக்கல் செய்வதால், நேரடியாக செலுத்துபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
thanks : News18