சனி, 31 டிசம்பர், 2016

Ban Peta :இப்பொழுது கூறுங்கள் எவ்வளவு பெரிய ராப்பெரி இது ?

அமேரிக்க இணையதளங்களுக்குள் திருட்டுத்தனமாக புகுந்து அமேரிக்க anonymous ஹேக்கர்கள் வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல் என்ன தெரியுமா ?
கேன்சர் என்ற ஒரே ஒரு உயிர்கொல்லியை உலகம் முழுக்க பரப்புவதினால் அமேரிக்காவிற்கு ஆண்டு வருமானமாக 90 பில்லியன் டாலர்கள் கிடைக்கிறது
அக்கேன்சரை வளர்ந்துவரும் நம்மைப்போன்ற நாடுகளில் பரப்ப நாட்டு மாடுகள் தடையாக இருக்கிறது
 புரியும்படிக்கூற வேண்டுமானால் நாட்டு மாட்டுப்பாலில் கேன்சரை அழிக்கும் சக்தி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது !
நம்பவில்லை என்றால் கிராமப்புரங்களில் நாட்டு மாட்டுப்பாலை பருகும் நபர்களிடம் சோதனை நடத்துங்கள் அவர்கள் கேன்சரால் பாதிக்கப்பட்டிருக்க மாட்டார்கள்
கேன்சர் என்பது சிட்டியில் வாழும் மக்களை மட்டுமே தாக்கும் ஏனெனில் அவர்கள்தான் பாக்கெட் பால்களை குடிக்கிறார்கள் !
இதற்காகத்தான் இத்தனை ஆட்டங்களை போட்டுக்கொண்டிருக்கிறார்கள்
பீட்டா எச்சைக்கல நாய்கள் !
இப்பொழுது கூறுங்கள் எவ்வளவு பெரிய ராப்பெரி இது ?
No automatic alt text available.

“The Hacker group Legion are Italy-based Israelis working for PM Modi” alleges Anon Hacktivist

There has been a series of assaults carefully targeted on high profile Indians Twitter handles like of Rahul GandhiINC officialVijaya Mallya , Barkha Dutt and Ravish Kumar, ironically except Vijaya Mallya all have been critics of Modi Government. It seemed obvious that such work is being done at some professional level and by some group hired by ruling government.
Finally the cat is out of the bag and busted these hackers who call themselves ‘Legion’ , they have been exposed after a hacktivist from Anonymous group claimed these hackers are based in Italy and are Israelis origin who have been hired by Prime Minister Narendra Modi’s administration.
The Anon Hacktivist claimed that they identified the “legion” hackers when they mistakenly dumped a zip file in Vijaya Mallya’s hacked account data, that tainted zip filed showed the Zip Tool carried their details.

The hacktivist also claims this is against the morality of Anonymous group to target anyone’s personal accounts

It is believed the Italian Based hackers coordinated with two more hackers from India while hacking Barkha Dutt and Ravish Kumar’s Twitter Handle, he disclosed the location to be from a Paharganj Hotel
He claimed it will be useless to depend on Delhi Police to track these hackers as they themselves have been using softwares developed by them. 
He added the reason why he is exposing the hackers is because they might become a threat for 1/6th of Indians
One more point to be noted is in July a twitter handle named ‘BJP Insider’ which claims to leak BJP office info’s had tweeted in July that BJP administration has hired few hackers to use against critics when needed



Dislclaimer : This article is based on the narrative of above twitter user, Irony of India holds no confirmation or authentication about the allegation.



source: http://www.ironyofindia.com/2016/12/the-hacker-group-legion-are-italy-based-israelis-working-for-pm-modi-alleges-anon-hacktivist/

மக்களின் மனகுமுறல்


நாம் நமது சகோதரிக்கு ஆதரவு கொடுக்க வேண்டும்.

சகோதரி ஜோதிமணி சென்னிமலை காவி ஹிந்துத்துவா தீவிரவாதிகள் மோடி,பாஜன காவி தீவிரவாத தவை விமர்சிக்கிறார் என்ற ஒரே காரணத்துக்காக
பாசிச கூட்டம் அவரிடம் அலைபேசியிலும் வாட்ஸ்ஆப் ஆபாசமாக பேசி வருகிறது. நாம் நமது சகோதரிக்கு ஆதரவு கொடுக்க வேண்டும்.

மோடிக்கு உ.பியில் ஒரு ஓட்டு கூட கிடைக்காது: சவால் விடும் மம்தா!

உ.பி தேர்தலில் ஆளும் கட்சி கவிழும் சூழல் உருவாகியிருக்கிறது. இது வட இந்திய அரசியலில் மட்டுமல்லாது மொத்த இந்தியாவின் அரசியல் போக்கிலும் ஆழமான பாதிப்பை உருவாக்கும் என்னும் நிலையில், கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா, “சமாஜ்வாதியின் உட்கட்சி விவகாரம், அது குறித்து கருத்து கூற விரும்பவில்லை. ஆனால் யார் வெற்றி பெற்றாலும் பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி என்று எது வெற்றி பெற்றாலும் பாஜக-வுக்கு ஒரு ஓட்டுக் கூட கிடைக்கக் கூடாது. மோடி அரசு மாயவதியை மிரட்டுகிறது.
ரூபாய் நோட்டு நடவடிக்கையை எதிர்ப்போர்களை அவர்கள் மிரட்டுகின்றனர். அவர்கள் பொய்களை பரப்பி வருகின்றனர். கோயபெல்ஸ் கொள்கையில் நம்பிக்கை கொண்டுள்ளனர்.ஒவ்வொரு நாளும் பாஜக தவறுகளைச் செய்து கொண்டே போகிறது. பிஹாரில் தவறிழைத்தனர் அங்கு லாலு, நிதிஷ் கூட்டணி வெற்றி பெற்றது.
ஜெயலலிதா மறைந்து 7 நாட்களுக்குள் தமிழக தலைமைச் செயலாளர் அலுவலகத்தில், வீட்டில் சோதனை நடத்தியுள்ளனர். சந்திரபாபு நாயுடு தனது எதிர்ப்புக் குரலை உயர்த்தினால் அவர் மீது ரெய்டு நடத்துவர்” என்றார் மம்தா.
SOURCE: KAALAIMALAR 

இந்தியா வெட்கம் கெட்ட நாடு!’ இயக்குநர் பா.இரஞ்சித்


மதுரை : “இந்தியாவைப்பற்றி பேசும்போது, இந்தியா கலாச்சாரத்தில் சிறந்தது, பண்பாட்டில் சிறந்தது என எல்லோரும் பெருமையாக சொல்கிறார்கள். என்னைப்பொறுத்தவரை இந்தியா ஒரு வெட்கம் கெட்ட நாடு என்றுதான் சொல்வேன்,” என இயக்குநர் பா.இரஞ்சித் பேசியுள்ளார்.
மதுரையில் மனிதக்கழிவு அகற்றுவோர் மறுவாழ்வு உரிமை கருத்தரங்கை ஆதித்தமிழர் கட்சி நடத்தியது. இதில் திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் கலந்து கொண்டு பேசுகையில், “இந்தியாவைப்பற்றி பேசும்போது, இந்தியா கலாச்சாரத்தில் சிறந்த நாடு, பண்பாட்டில் சிறந்த நாடு என எல்லோரும் பெருமையாக பேசுகிறார்கள். என்னைப் பொறுத்தவரை இந்தியா ஒரு வெட்கம் கெட்ட நாடு என்றுதான் சொல்வேன்.
இது நாகரீகமற்ற நாடு. மனிதனை மனிதனாக பார்க்காத நாடு. இங்கு சமூக நீதியை எதிர்பார்த்தால் எப்படி கிடைக்கும்.? அரசாங்கம் தானே நம்மை இழிவான வேலையை செய்ய சொல்கிறது. இந்த வருடத்தில் மட்டும் 26 பேர் பாதாள சாக்கடையில் இறங்கி, இறந்து போயிருக்கிறார்கள். அதில் எத்தனை இளைஞர்கள் அவர்களின் கனவுகள் அழிந்து போனது. இந்த நிலை தொடர வேண்டுமா?
இந்த விஷயத்தில் ஊடகங்கள் கூட மவுனம் சாதிக்கிறது. மனிதக்கழிவை அகற்றுவோர்க்கு மறுவாழ்வு அளிக்கும் சட்டத்தை அரசே அமல்படுத்த மறுக்கிறது. இதைப்பற்றி நாம்தான் பேசுகிறோம். வேறு யாராவது பேசுகிறார்களா? தனித்தொகுதியில் வெற்றி பெற்று சென்றவர்கள் யாராவது இதைப்பற்றி பேசினார்களா? இதை யாரும் பேச மாட்டார்கள்.
உணவுக்காகத்தானே இந்த வேலையை செய்கிறோம். இந்த வேலையை செய்து சாவதை விட, சாப்பிடாமல் செத்துப்போகலாம்.  ஆம், இந்த வேலையை செய்ய மாட்டோமென்று எல்லோரும் ஒருநாள் இருந்து பாருங்கள். அப்போதுதான் இதுக்கு முடிவு வரும்.  ஒரு கல்யாணம், திருவிழா என்றால் சாதியாக ஒன்றாக சேருகிறீர்கள்.
ஆனால் இந்த இழிவான வேலையை செய்ய மாட்டோமென்று சொல்ல ஏன் ஒன்றாக திரள மறுக்கிறீர்கள். இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் இப்படியே அறிவற்றவர்களாக அடிமைகளாக இருக்க போகிறீர்கள். இங்கு நீதியை எதிர்பார்க்காதீர்கள். இந்த நாடு மாட்டை தெய்வமாக்கி மனிதனை அடிமையாக நினைக்கும் நாடு. இங்கு நீதி கிடைக்காது.
நாம் சுய உணர்வுள்ளவர்களாக மாற வேண்டும். நீங்க இந்த வேலையை  மறுக்க ஏன் அஞ்சுகிறீர்கள், அடிப்பார்கள் என்றா? அடித்தாலும் பரவாயில்லை. அடி வாங்குங்கள் ஆனால், இந்த வேலையை  மட்டும் செய்யாதீர்கள்.  நம்முடைய கனவுகளை லட்சியங்களை அடைய இடையிலுள்ள தடை கற்களை உடைக்க வேண்டும் என்று அம்பேத்கார் சொன்னார். ஒவ்வொரு முறையும் நம்மை காப்பாற்ற இயேசு வருவார், அம்பேத்கார் வருவார் என்று எதிர்பார்க்கக்கூடாது. நம் பசிக்கு எப்படி நாம் உணவு சாப்பிடுகிறோமோ, அதுபோல் நம்மீதான இழிவுகளை களைய நாம்தான் முடிவெடுக்க வேண்டும். அடுத்த தலைமுறைக்கு இந்த வேலையை விட்டு செல்ல வேண்டாம். இவை இன்றோடு போகட்டும். மகிழ்ச்சி”. என்றார்.
இந்த நிகழ்வில் ஆதித்தமிழர் கட்சியின் தலைவர் ஜக்கையன், கிறிஸ்துதாஸ்காந்தி ஆகியோர் பங்கேற்று பேசினார்கள்.
source: kaalaimalar 

புத்தாண்டு முதல் வாரத்திலே பூமிக்கு மிக அருகில் கடக்கவுள்ள வால் நட்சத்திரம்..!

புத்தாண்டு தொடக்கத்தில் பூமிக்கு மிக அருகில் வால் நட்சத்திரம் ஒன்று கடந்து செல்ல உள்ளதாக நாசா விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஜனவரி மாதம் முதல் வாரத்தில் C/2016 U1 NEOWISE எனப் பெயரிடப்பட்டுள்ள வால் நட்சத்திரம் பூமிக்கு மிக அருகில் கடந்து செல்லும் என விண்வெளி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். NEOWISE என்ற தொலைநோக்கியின் மூலம் இந்த வால் நட்சத்திரம் கண்டறியப்பட்டுள்ளது.
எரிக்கல் மற்றும் வால் நட்சத்திரங்களின் பயணங்கள் குறித்து ஆய்வு செய்ய NEOWISE என்ற தொலைநோக்கியை விண்வெளிக்கு நாசா அனுப்பியது. இதன் ஆய்வின்படி ஜனவரி முதல் வாரத்தில் பூமிக்கு மிக அருகில் வால் நட்சத்திரம் ஒன்று கடந்து செல்ல உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த வால் நட்சத்திரமானது மிகவும் பிரகாசமாக இருக்கும் எனவும் பைனாக்குலர் கருவி மூலம் காணமுடியும் எனவும் நாசா விண்வெளி ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பூமிக்கு மிக அருகில் உள்ள கோளான புதன் வழியாக கடந்து செல்லும் இந்த நட்சத்திரத்தால் பூமிக்கு எந்த ஆபத்தும் இல்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

புவி சுழற்சியில் மாற்றம்... தாமதமாக பிறக்கும் 2017..!

புத்தாண்டை வரவேற்கும் ஆவலுடன் வருடத்தின் கடைசி தருணத்தில் அனைவரும் உள்ளோம். ஆனால் 2017-ஆம் ஆண்டு வழக்கத்தை விட ஒரு நொடி தாமதமாகப் பிறக்கும் என்று கால அளவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
புவி சுழற்சியில் ஏற்பட்ட தாமதம் காரணமாக 2017-ஆம் ஆண்டானது வானியல் கடிகாரத்தின்படி ஒரு நொடி காலதாமதமாக பிறக்க உள்ளது. பூமியின் நாள் ஒன்றிற்கான சுழற்சியை கொண்டு வானியல் நேரம் கணக்கிடபடுகிறது. இதன் அடிப்படையில் உலகம் முழுவதும் 400 இடங்களில் உள்ள அணு கடிகாரம் மூலம் துல்லியமாக நேரம் கணக்கிடப்படுகிறது.
நிலவின் ஈர்ப்புவிசை, புவிநடுக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் புவி சுழற்சி தாமதமாகி இருக்கலாம் என சர்வதேச பூமி சுழற்சி அமைப்பு (IERS) அறிவித்துள்ளது. புவி சுழற்சி தாமதம் காரணமாக 500 முதல் 750 நாட்கள் வரை வானியல் நேரத்துக்கும் அணு கடிகார நேரத்துக்கும் இடையில் ஒரு விநாடி வேறுபாடு எற்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனை ஈடுசெய்ய உலக கடிகாரத்தில் டிசம்பர் 31-ஆம் தேதி இரவு 11 மணி 59- வது நிமிடம், 59- வது நொடிக்குப் பிறகு செயற்கையாக ஒரு ‘லீப்’ நொடி சேர்க்கப்படும். இது, வானியல் கடிகாரத்துக்கும், உலக கடிகாரத்துக்கும் இடையே ஏற்படும் தாமதத்தை ஈடுசெய்யும் என எதிர்பார்க்கபடுகிறது.
லீப் விநாடி முறையானது 1972 ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது. உலகில் இதுவரை 26 முறை லீப் விநாடி சேர்க்கப்பட்டுள்ளது. அந்தவகையில் 27-வது முறையாக இந்த வருடம் டிசம்பர் 31-ஆம் தேதி லீப் விநாடி சேர்க்கப்படவுள்ளது. எனவே எதிர்வரும் 2017 புத்தாண்டு பிறப்பதற்கு கூடுதலாக ஒரு விநாடி எடுக்கும் என்பது ஆய்வாளர்களின் கருத்து.

இவிங்ககிட்ட கத்துக்கங்க மக்களே...

கீழக்கரை மக்களின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்....!!!
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் உள்ள தங்களனைவரது கணக்குகளையும் உடனடியாக முடித்து முழு பணத்தையும் திரும்பத்தர வேண்டும் என கீழக்கரை மக்கள் தொடுத்துள்ள அதிரடி தாக்குதல் -
தறிகெட்டு ஓடும் மோடியை எப்படி கையாள வேண்டும் என்பதற்கான வழிகாட்டுதலாகவும் -
தேசமெங்கும் நிகழவிருக்கும் மிகப்பெரும் போராட்டத்திற்கான துவக்கமாகவும் உலகம் காணும்....இன்ஷாஅல்லாஹ்.....

வெள்ளி, 30 டிசம்பர், 2016

மம்தா பானர்ஜி நேற்று மாநில அரசு அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகளுக்கு ஒரு உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

"மேற்குவங்க மாநில முதல்–மந்திரி மம்தா பானர்ஜி தொடர்ந்து மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறார். உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு சமீபத்தில் வாபஸ் பெற்றதற்கு அவர் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். மேலும்
#மத்திய_அரசுக்கு_எதிராக#எதிர்க்கட்சிகளை_ஒருங்கிணைக்கும்#முயற்சியிலும்_அவர்_ஈடுபட்டு #வருகிறார்.
இந்நிலையில் மம்தா பானர்ஜி நேற்று மாநில அரசு அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகளுக்கு ஒரு உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
அதில்,,, 
மாநில அரசு குறித்த எந்த தகவலையும் மத்திய அரசுக்கு தெரிவிக்க கூடாது. சட்டம் ஒழுங்கு பிரச்சினை மட்டுமின்றி தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகளில் கூட மத்திய அரசுக்கு ஒத்துழைக்க வேண்டாம். எந்த ஒரு அவசர தகவலையும் முதல்–மந்திரி அலுவலகத்துக்கோ அல்லது தலைமைச் செயலாளர் அலுவலகத்துக்கோ தான் அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஏற்கனவே 2013–ம் ஆண்டு மன்மோகன் சிங் தலைமையில் மத்திய அரசு இருந்த போதும் இதே போல் ஒரு உத்தரவை மம்தா பானர்ஜி பிறப்பித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Image may contain: 1 person, text

தகவல் பெறும் உரிமை சட்டத்தில், உங்கள் ஊராட்சி பற்றி தகவல்

தகவல் பெறும் உரிமை சட்டத்தில்,
உங்கள் ஊராட்சி பற்றி தகவல் கேட்க போகிறர்கள் என்றால்,
உங்கள் ஊராட்சி அலுவலகத்தில் பொது தகவல் அலுவலர் என்ற ஒருவர் இல்லை,
ஆதலால் உங்கள் ஊராட்சி அலுவலகத்திற்கு உங்கள் தகவல் சட்ட விண்ணப்பத்தை அனுப்ப வேண்டாம்,
அப்படி மீறி அனுப்பினால்,கடிதம் அனுப்பிய உங்களுக்கே திருப்பி அனுப்பபடும்,இந்த தவறை செய்யாதீர்கள்,.
ஊராட்சி அலுவலகத்தில் இருக்கும் ஊராட்சி செயலாளர் என்பவர் ,உதவி பொது தகவல் அலுவலராக செயல்படுவார்,
ஆனால் தகவல் பெறும் உரிமை சட்டத்தில் வரும் விண்ணப்பங்களை பெற்று அதற்கு அவர் பதிலளிக்க தேவையில்லை,.
உங்கள் ஊராட்சி பற்றி தகவல் சட்டத்தில் கேட்க போகிறர்கள் என்றால்,உங்கள் ஊராட்சிகளின் ஒன்றிய அலுவலகம்,இந்த ஒன்றிய அலுவலகம் என்பது வட்டார வளர்ச்சி அலுவலகம் என்பது தான்,
ஆதலால்,உங்கள் கடிதத்தை வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு அனுப்பி வையுங்கள்,
வட்டார வளர்ச்சி அலுவலகம் என்பது ஆங்கிலத்தில் BLOCK DEVELOPMENT OFFICE,
ஒன்றிய அலுவலகம் என்பது UNION OFFICE.
வட்டார வளர்ச்சி அலுவலகம் என்பதும் ஒன்றிய அலுவலகம் தான்,இரண்டும் ஒன்று தான்.
கீழே உள்ள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்,
பெறுனர்,
பொது தகவல் அலுவலர்,
த.பெ.உ.ச -2005,
வட்டார வளர்ச்சி அலுவலகம்,
இடம் பெயர்_________
__________________
மாவட்டம்_________
..கீழே ஒரு மாதிரி விண்ணப்பமாக ,சின்னதாக எழுதுகிறேன்.,
அனுப்புனர்,
name
place
__________
__________
பெறுனர்,
பொது தகவல் அலுவலர்,
த.பெ.உ.ச -2005,
வட்டார வளர்ச்சி அலுவலகம்,
இடம் பெயர்_________
__________________
மாவட்டம்_________
ஐயா / அம்மா,
பொருள் : தகவல் பெறும் உரிமை சட்டம் 2005 சட்டப்பிரிவு 6(1)-இன் கீழ் தகவல் கோருவது தொடர்பாக.....
கோரப்படும் தகவல்கள் / ஆவணங்கள் விபரம் :
1. கடந்த 2014 ஆம் ஆண்டின் வரவு செலவு கணக்கு தகவல்களை தரவும்.
2.கடந்த 2014 ஆம் ஆண்டு எங்கள் ஊராட்சிக்கு ஒதுக்கப்பட்ட அரசு நிதி பற்றி தகவல்கள் தரவும்.
3.________
4__________
5___________
6__________
இப்படிக்கு,
your name 
இவ்வாறு ஒரு வெள்ளை பேப்பர் ல எழுதி விண்ணப்பம் அனுப்ப வேண்டும்.
ஆங்கிலத்தில் பெறுனர் முகவரி,
TO,
THE PUBLIC INFORMATION OFFICER,
RTI -2005,
BLOCK DEVELOPMENT OFFICE,
PLACE _______

இந்தியாவை அலற வைத்த அந்த நாள்!


‘மதம் மாறணுங்க’னு நாங்க யாரையும் வற்புறுத்தலை. ‘மதம் மாறி என்னத்தைக் கண்டிய?’னு இப்பவும் சிலர் கேக்கிறாங்க. படிச்ச படிப்புக்கும், பாக்குற உத்தியோகத்துக்கும் அதை எல்லாம்விட மனுஷனா இருக்கிறதுக்குமான மரியாதை கிடைச்சிருக்கு.
அப்போலாம் நம்மளைவிட சின்ன வயசுக்காரனா இருப்பான்… ஆனா ‘ஏலே’னுதான் கூப்பிடுவான். இப்போ, ‘வாங்க பாய்… உக்காருங்க’னு சொல்றான். மதம் மாறுனதால கிடைச்ச மரியாதை இது. ஆனா, இந்த நினைப்பெல்லாம்கூட என் சந்ததியோடு முடிஞ்சுபோயிரும். அடுத்தடுத்து வர்றவனுக்கு இதெல்லாம் தெரியாது.
பார்த்தீங்கன்னா… எங்க குடும்பங்களில் மாமன் முஸ்லிமா இருப்பான். மச்சான் இந்துவா இருப்பான். அப்பன் முஸ்லிமா இருப்பான். பிள்ளை இந்துவா இருப்பான். மதம் எங்களைப் பிரிக்கவும் இல்லை; குழப்பத்தையும் உண்டாக்கலை. எல்லாரும் அண்ணன் தம்பியா ஒற்றுமையா வாழ்றோம்!” – அப்போது எடுத்த முடிவு சரியானதுதான் என்பதை இப்போதும் தீர்க்கமான வார்த்தைகளில் வெளிப்படுத்துகிறார் உமர்.]
இந்தியாவை அலற வைத்த அந்த நாள்!
அந்த நாள், இந்தியாவையே அலற வைத்தது! திருநெல்வேலி மாவட்டத்தின் சின்னஞ்சிறிய கிராமம் மீனாட்சிபுரம். அங்கு வாழ்ந்த 300 குடும்பங்களில் 210 குடும்பத்தினர் இந்து மதத்தில் இருந்து இஸ்லாம் மார்க்கத்துக்கு மாறினார்கள். 1981-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19-ம் தேதி, ஒரு குட்டிக் கிராமமே மதம் மாற, ‘இந்து மதத்துக்கு ஆபத்து’ என டெல்லி வரை பற்றிக்கொண்டது பரபரப்பு!
அப்போது மத்தியில் இந்திரா காந்தியின் ஆட்சி; தமிழகத்தில் எம்.ஜி.ஆரின் ஆட்சி. ‘சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியா எதிர்கொண்ட மிகப் பெரிய இக்கட்டு இது’ எனக் குரல்கள் எழ, மத்திய உள்துறை அமைச்சர் யோகேந்திர மக்வானா உடனடியாக மீனாட்சிபுரத்துக்கு விரைந்தார். பா.ஜ.க தலைவர் வாஜ்பாயும் மீனாட்சிபுரத்துக்குப் பறந்தோடி வந்தார். தமிழகச் செய்தித் துறை மற்றும் இந்துசமய அறநிலைத் துறை அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் வந்தார். மதம் மாறிய மக்களுக்கு மத்திய அமைச்சர் மக்வானா தைரியம் சொன்னார். ‘மீண்டும் இந்து மதத்துக்குத் திரும்பிவிடுங்கள்’ என்று கேட்டுக்கொண்டார் வாஜ்பாய். ஆர்.எம்.வீரப்பன் விழிபிதுங்கி நின்றார். அனைவருக்கும் மௌனத்தையே பதிலாகத் தந்தனர் மீனாட்சிபுரம் முஸ்லிம்கள்!
இப்போதும் அரசு ஆவணங்களிலும் இந்துக்களிடமும் அந்தக் கிராமத்துக்கு ‘மீனாட்சிபுரம்’ என்பதுதான் அடையாளம். ஆனால், உள்ளூர் முஸ்லிம்களுக்கு அது ரஹ்மத் நகர். பெயரும் மதமும்தான் வித்தியாசமே தவிர, உள்ளூர் மக்கள் அனைவரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள்போல பிணைந்து கிடக்கின்றனர். பாபர் மசூதி தகர்ப்பு இந்தியாவின் பல இடங்களில் இந்து-முஸ்லிம்கள் இடையே கலவரத்தை உண்டாக்கியபோதும், மீனாட்சிபுரம் மக்களிடையே சின்ன சலசலப்புகூட இல்லை!
மீனாட்சிபுரம் மக்கள் மதம் மாற என்ன காரணம்?
67 வயதைத் தொடும் உமர் ஷெரிஃபின் பழைய பெயர் துரைராஜ். அன்றைக்கு நடந்த மதமாற்றத்தை முன்னின்று நடத்திய இவர், அந்த நாட்களை நினைவுகூர்கிறார்…
”நாங்க ஏன் இஸ்லாத்தை தழுவினோம் என்பதற்கு ஒவ்வொருத்தரும் வெவ்வேறு கதைகட்டிவிட்டார்கள். ஆனா, அப்போ என்ன நடந்தது என்பதற்கு சாட்சி நாங்கள் மட்டுமே. ‘ஒரு சாதாரண கிராமத்து மக்கள் சேர்ந்து இப்படி ஒரு முடிவு எடுத்துட்டாங்களே’னு பரபரப்பாயிருச்சு. ‘ஏன் மாறுனீங்க, வளைகுடாவில் இருந்து பணம் வந்துச்சா?’னுலாம் கேட்டாங்க.
நாங்க பிரியாணிக்கு ஆசைப்பட்டு மதம் மாறிட்டோம்னு பலரும் அவதூறு பரப்பினாங்க. அது எதுவும் உண்மை இல்லை. நான் ஸ்ரீவைகுண்டம் காலேஜ்ல பி.ஏ வரை படிச்சேன். வெள்ளை வேட்டி, சட்டைதான் கட்டுவேன். நாங்க நல்ல வசதிதான். ஆனா, என்னதான் சுத்தமா துணிமணி உடுத்தினாலும், காலேஜுக்குப் போய்ப் படிச்சாலும் நான் ஒரு தாழ்த்தப்பட்டவன்கிறதால எனக்கு ஊருக்குள்ள எந்த மரியாதையும் இல்லை; சுதந்திரமா நடக்க முடியலை.
உயர் சாதிக்காரர் குடிக்கிற அதே கிளாஸில் டீ குடிக்க முடியாது. அவர் குடுக்கும் காசைத்தான் நாங்களும் குடுப்போம். ஆனா, எங்களுக்கு வாழை இலையில் டீ ஊத்திக் குடுப்பாங்க. ‘ஏன் இப்படி?’னு எதிர்த்துக் கேள்வி கேட்க முடியாது.
வாழ்ந்தா கௌரவமா, சுயமரியாதையோட வாழணும்னு தோணிட்டே இருந்துச்சு. சொத்துபத்து இல்லைன்னா, கஷ்டப்பட்டு உழைச்சு சம்பாரிச்சுக்கலாம். ஆனா, மரியாதையை எங்கே போய் வாங்குறது? அதான் மானத்தோட வாழணும்னு முடிவு பண்ணி, நாங்க மொத்தமா மதம் மாறினோம்!” – தோள் துண்டை சரிசெய்தபடி தொடர்கிறார் உமர் ஷெரிஃப்.
”நாமதான் நம்மளை இந்துனு சொல்லிக்கிறோம். ஆனா, உயர்சாதிக்காரர்கள் ‘பள்ளப் பய, அரிஜன்’னுதான் சொல்வார்கள். இப்போ நாம மதம் மாறினா கொஞ்சம் வருஷம் கழிச்சு நம்ம சந்ததியாவது, அந்தக் கொடுமையில் இருந்து தப்பிப்பாங்கனு முடிவு எடுத்தோம். கொஞ்சம் பேர் கூடி ஒவ்வொரு வீடாப் போய் ‘இந்து மதத்தின் ‘பள்ளர்’ என்ற பிரிவில் இருந்து நாங்களாக விரும்பி மனமுவந்து இஸ்லாம் மார்க்கத்துக்கு மாறுகிறோம்’னு விருப்பக் கையெழுத்து வாங்கி மதம் மாறினோம்.
‘மதம் மாறணுங்க’னு நாங்க யாரையும் வற்புறுத்தலை. ‘மதம் மாறி என்னத்தைக் கண்டிய?’னு இப்பவும் சிலர் கேக்கிறாங்க. படிச்ச படிப்புக்கும், பாக்குற உத்தியோகத்துக்கும் அதை எல்லாம்விட மனுஷனா இருக்கிறதுக்குமான மரியாதை கிடைச்சிருக்கு. அப்போலாம் நம்மளைவிட சின்ன வயசுக்காரனா இருப்பான்… ஆனா ‘ஏலே’னுதான் கூப்பிடுவான். இப்போ, ‘வாங்க பாய்… உக்காருங்க’னு சொல்றான். மதம் மாறுனதால கிடைச்ச மரியாதை இது. ஆனா, இந்த நினைப்பெல்லாம்கூட என் சந்ததியோடு முடிஞ்சுபோயிரும். அடுத்தடுத்து வர்றவனுக்கு இதெல்லாம் தெரியாது. பார்த்தீங்கன்னா… எங்க குடும்பங்களில் மாமன் முஸ்லிமா இருப்பான். மச்சான் இந்துவா இருப்பான். அப்பன் முஸ்லிமா இருப்பான். பிள்ளை இந்துவா இருப்பான். மதம் எங்களைப் பிரிக்கவும் இல்லை; குழப்பத்தையும் உண்டாக்கலை. எல்லாரும் அண்ணன் தம்பியா ஒற்றுமையா வாழ்றோம்!” – அப்போது எடுத்த முடிவு சரியானதுதான் என்பதை இப்போதும் தீர்க்கமான வார்த்தைகளில் வெளிப்படுத்துகிறார் உமர்.
மீனாட்சிபுரம் மதமாற்றம் கொளுத்திய நெருப்புதான், தமிழகத்தில் வேறு பல கொந்தளிப்புகளுக்குக் காரணமானது; இந்து எழுச்சி மாநாடுகள் அதிகம் நடத்தவும் காரணமானது. 1982-ல் அதுதான் மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் விழாவில் கலவரமாக மாறி, 15 நாட்கள் குமரி மாவட்டத்தை கலவர பூமியாக மாற்றியது. அதுவரை அண்ணன் தம்பிகளாகப் பழகிவந்த இந்துக்களும் கிறிஸ்தவர்களும் மோதிக்கொள்ள, காணாமல்போனவர்கள், கொல்லப்பட்டவர்கள் என டஜன் கணக்கில் உயிர்களைப் பலிவாங்கியது அந்தக் கலவரம். ஆனால், அதோடு முடியவில்லை. மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டு, அதுவும் களேபரமாகி ஓய்ந்தது. ஆனால், அப்போதும்கூட மீனாட்சிபுரத்தில் சின்னச் சண்டை சச்சரவுகூட இல்லை.
மீனாட்சிபுரத்தில் பல ஆண்டுகளாகவே தாழ்த்தப்பட்டவர்கள் மீதான அடக்குமுறை நிலவினாலும், ஒட்டுமொத்தமாக மதம் மாறத் தூண்டியதற்கு பின்னணியில் ஒரு காதல் இருக்கிறது! அந்தக் கதையைச் சொல்கிறார் உமர் ஃபரூக்.
”அப்போ தங்கராஜ்னு ஒரு அண்ணன் இருந்தார். அவர் மேக்கரை கிராமத்தில் சாதி இந்து பொண்ணைக் காதலிச்சார். அவங்க ரெண்டு பேரும் ஊரைவிட்டு ஓடிவந்தப்போ, பெரிய பிரச்னை ஆயிருச்சு. தங்கராஜ் ஊருக்குள்ள அடைக்கலம் தேடினப்போ, ‘நீங்க முஸ்லிமா மதம் மாறிடுங்க. உங்க ரெண்டு பேரின் சாதியும் அழிஞ்சிரும்’னு சொன்னாங்க. உடனே அவர் கேரளாவில் இருக்கிற பொன்னானிக்குப் போய் தன் பேரை ‘யூசுஃப்’னு மாத்திக்கிட்டு இஸ்லாம் மார்க்கத்தைத் தழுவினார். அதுக்குப் பிறகு மேக்கரையில் நடந்த சில சம்பவங்களில் போலீஸ் வேணும்னே மீனாட்சிபுரம் மக்களையும் யூசுஃப்பையும் துன்புறுத்தினாங்க. அதுதான் நாங்க கூட்டம் கூட்டமா மதம் மாறக் காரணம். தாழ்த்தப்பட்டவங்களா இந்து மதத்தில் இருந்து தினம் தினம் கொடுமையை அனுபவிக்கிறதுக்கு, நம்ம அடையாளத்தையே மாத்திக்கிலாம்னுதான் அந்த முடிவை எடுத்தோம்.
வீட்ல இருந்து செருப்பு போட்டுட்டு கிளம்புற நாங்க, ஊருக்குள்ள சில இடங்களுக்குப் போகும்போது மட்டும் அந்தச் செருப்பை கையில் தூக்கிக்கணும். ‘தாழ்த்தப்பட்டவன் இந்த வேலைகளைத்தான் செய்யணும், இப்படித்தான் வாழணும், இப்படித்தான் உடுத்தணும்’னு அவங்க எதிர்பார்ப்புக்கு நாங்க எப்படி வாழ முடியும்? அதான் மதம் மாறிட்டோம். அப்போ இஸ்லாம் மார்க்கத்தைத் தழுவ பல ஜமாத்களைத் தொடர்புகொண்டோம். அவங்க சரியா ஒத்துழைக்கல. கடைசியா திருநெல்வேலியில் போய் பதிவு பண்ணோம். அவங்க ‘கலிமா’ சொல்லிக்கொடுத்து மாத்தினாங்க. இஸ்லாத்தில் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற வேறுபாடு இல்லை. எல்லோருமே மனுஷங்க… அவ்வளவுதான்!”
தலித்களாக இருந்து மதம் மாறியவர்களின் சமூக அந்தஸ்து மேம்பட்டிருந்தாலும் தங்களை அந்த மதத்துக்குள்ளேயே சமமாக ஒருசிலர் ஏற்றுக்கொள்வது இல்லை என்ற குறை, அவர்களுக்கு உள்ளது. அதுபோல இஸ்லாம் தழுவிய சிலர் மீண்டும் இந்து மதத்துக்கே திரும்பியும் இருக்கிறார்கள். ஆனால், அது சுமுகமாகவே நடக்கிறது. 1981-ல் இஸ்லாம் தழுவிய ஆறுமுகச் சாமி தன் பெயரை ரஹ்மான் கான் என மாற்றிக்கொண்டார். ரஹ்மான் கான் மீண்டும் 2009-ல் இந்து மதத்துக்குத் திரும்பி ஆறுமுகச் சாமி ஆகிவிட்டார். அவருடைய வாக்குமூலம் மதமாற்ற வரலாற்றை இன்னொரு பார்வையில் பதிவுசெய்கிறது.
”நான் மதம் மாறினப்போ என் மகன்கள் அன்னராசு, ராமச்சந்திரன்… ரெண்டு பேரும் சின்னப் பசங்க. அதனால் அவங்களை நான் மதம் மாத்தலை. வளர்ந்து ஆளாகி அவங்களா விரும்பினால் மாறிக்கட்டும்னு விட்டுட்டேன். இப்போ அன்னராசு, ரயில்வேயில் வேலை பார்க்கிறான். ராமச்சந்திரன், வெளிநாட்டில் இருக்கான். சில வருஷம் முன்னாடி, ‘நீங்களும் இஸ்லாத்துக்கு மாறுறீங்களா?’னு கேட்டேன். அப்போ அதை மறுத்து அவங்க சொன்ன பதில் எனக்கு நியாயமாத் தெரிஞ்சது.
‘உன்னை ஒரு சாதி இந்து அடிச்சா, நீ வாங்கிட்டுப் பேசாமப் போனது அந்தக் காலம். ஆனா, இப்போ நிலவரம் அப்படி இல்லை. யாரும் யாரையும் அடக்க முடியாது; அதிகாரம் பண்ண முடியாது. மீறி என்னை ஒருத்தன் அடிச்சா, அவனை நான் ரெண்டு அடி திருப்பி அடிப்பேன். எங்க வாழ்க்கையை நாங்க வாழ்ந்துக்கிறோம்’னு சொல்லிட்டாங்க. இன்றைய இளைஞர்களின் மனநிலை இப்படித்தான் இருக்கு. அதுக்காக இந்து மதத்தில் தீண்டாமை ஒழிஞ்சிருச்சுனு அர்த்தம் இல்லை. அதுக்கு எதிரான போராட்டம் தீவிரமாகிடுச்சுனு எடுத்துக்கலாம்.
கடந்த கால் நூற்றாண்டில், தாழ்த்தப்பட்டவரா இருந்து முஸ்லிமா மாறியவர் வாழ்வில் எப்படி மாற்றங்கள் வந்திருக்கோ, அதேபோல தாழ்த்தப்பட்டவர் வாழ்க்கையிலும் மாற்றங்கள் ஆரம்பிச்சிருக்கு.
‘பட்டியல் சாதியினர் ரொட்டிக்காகவும் மீனுக்காகவும் போராடுகின்றனர்; மதம் மாறுகின்றனர் எனச் சொல்வது கடைந்தெடுத்த முட்டாள்தனம். இந்த நாடு பின்பற்றவேண்டிய சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்துக்காக அவர்கள் போராடுகிறார்கள்!’ என்றார் அண்ணல் அம்பேத்கர். மீனாட்சிபுரம் அனுபவம் இன்றும் உணர்த்துவது அதைத்தான்!
-டி.அருள் எழிலன்,

ஆயுத பயிற்சி காலை 3 மணிக்கு தொடங்கின்ற பயிற்சி மக்கள் தெரியாமல் படம் பிடித்து உள்ளனர்

RSS கேரள மாநிலம் கண்ணூரில் ரகிசியமாக. நடத்தும்
ஆயுத பயிற்சி காலை 3 மணிக்கு தொடங்கின்ற பயிற்சி மக்கள் தெரியாமல் படம் பிடித்து உள்ளனர்
மனிதர்களை கொல்லுவதற்கும்
கை கால்களை முறிப்பதற்க்கும்
பயிற்சி கொடுக்கப்படுகின்றனர்
சிறுவர்களின் வாழ்க்கையை சீரழிக்கும் RSS
காலை 3 மணிக்கு பயிற்சி எடுப்பதற்கு என்ன காரணம்
கேரள CPM. அரசு நடவடிக்கை எடுக்குமா? ?
தீவிரவாத இயக்கம் RSS யை தடை செய்யுமா??

source: FB 

இந்தியாவின் துணிச்சல் தலைவர்! முதலமைச்சரான தனது மகனையே கட்சியில் இருந்து நீக்கினார்!


உத்தரப்பிரதேசத்தின் ஆளும் கட்சியான சமாஜ்வாதி கட்சியில் மிகப்பெரும் பிளவு ஏற்பட்டுள்ளது.
அக்கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ், தனது மகனும் மாநில முதலமைச்சருமான அகிலேஷ் யாதவை கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கி உத்தரவிட்டுள்ளார்.
இந்த அறிவிப்பு இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தந்தைக்கும் மகனுக்கும் இடையே நீண்ட நாட்களாக பிரச்சனை இருந்து வந்தது.
அகிலேஷ் யாதவ் முதலமைச்சராக பொறுப்பேற்ற  சிறிது காலத்திலேயே,  முதலமைச்சர்  இப்படித் தான்  நடந்து கொள்ள வேண்டும் என சில அறிவுரைகளை ஊடகங்கள் வாயிலாக முலாயம் சிங் யாதவ் வழங்கியது பரபரப்பை ஏற்படுத்தியது.
அப்போது தொடங்கிய பிரச்சனை தற்போது மிகப்பெரும் பிளவாக வெடித்துள்ளது. கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்திற்கு அகிலேஷ் யாதவின் ஆதரவாளர் ராம்கோபால் யாதவ் அழைப்பு விடுத்திருந்தார்.
இந்நிலையில் இன்று திடீரென செய்தியாளர்களை சந்தித்த முலாயம் சிங் யாதவ், தனது மகன் அகிலேஷ் யாதவ் மற்றும் அவரது ஆதரவாளரும் உறவினருமான ராம் கோபால் யாதவ் ஆகியோரை கட்சியில் இருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்குவதாக அறிவித்தார்.
இது கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதற்காக எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை என்றும், கட்சியை காப்பாற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கை என்றும் முலாயம் சிங் விளக்கம் அளித்துள்ளார்.
கட்சியின் தேசிய செயற்குழுவை கூட்ட கட்சித் தலைவரான தனக்கே அதிகாரம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். உத்தரப்பிரதேச சட்டப்பேரவையின் பதவி காலம் முடிய இன்னும் 3 மாதங்களே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பணத்தட்டுப்பாடு மோடியை தூக்கிலிட்டு நூதன போராட்டம்..! சேலத்தில் பரபரப்பு..!


ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவித்து 50 நாட்களுக்கு மேலாக ஆகியும் பணத்தட்டுப் பாட்டை சரி செய்திடாத மத்திய பாஜக அரசை கண்டித்து, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சேலம் ராமகிருஷ்ணா சாலையில் இருந்து பிரதமர் மோடியின் முக மூடி அணிந்தவர்களை தூக்கில் போடுவதை போன்று சித்தரித்து ஊர்வலமாக வந்த வாலிபர் சங்கத்தினர், அந்த பகுதியில் உள்ள ஸ்டேட் வங்கியின் முன்பு மத்திய அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பண தட்டுபாட்டை சரி செய்திடாமல் இருக்கும் மத்திய அரசுக்கு எதிராகவும், இந்த அறிவிப்பிற்கு பிறகு வங்கியில் வரிசையில் நின்று உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பினர்.
பாதுகாப்பிற்காக காவல்துறையினர் அதிக அளவு குவிக்கப்பட்டு இருந்த நிலையில் அவர்கள் முன்பாகவே, பிரதமரை தூக்கில்  இடுவது போன்று நடைபெற்ற இந்த நூதன போராட்டத்தினால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
source: kaalaimalar.net

நேர்மையாக உள்ளவர்களுக்கு ஆவேசம் வரும்” – தமிழிசைக்கு ராம்மோகன்ராவ் பதிலடி


ராம் மோகனராவின் சர்ச்சைக்குரிய பேட்டி பற்றி கருத்து கூறிய பாஜக தலைவர் தமிழிசை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டவர் நாலு நாளில் சுறுசுறுப்பாக எப்படி இப்படி பேட்டி கொடுக்க முடிகிறது என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
தமிழக மக்களின் பிரதிநிதி ராம்மோகன் ராவ் கிடையாது, அவருக்கு பேட்டி அளிக்க எந்த உரிமையும் இல்லை என்று கூறியிருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள ராம்மோகனராவ் நேர்மையாக் உள்ளவர்களுக்கு ஆவேசம் வரத்தான் செய்யும் என்று கூறியுள்ளார்.
செய்தி தாள் ஒன்றுக்கு அவர் அளித்த பிரத்யோகபேட்டி:
கே: ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டவர், 4 நாளில் இவ்வளவு ஆவேசமாக பேசுகிறாரே? இத்தனை நாள் ஏன் மவுனமாக இருந்தார்? என்று தமிழக பாஜ தலைவர் தமிழிசை உட்பட பல அரசியல் கட்சித் தலைவர்கள் கேள்வி எழுப்பி இருக்கின்றனரே?
ப: அரசு சம்பளம் வாங்குபவன் என்றாலும் நானும் சராசரி மனிதன் தான். அடித்தால் பொறுத்துக் கொண்டு போக முடியாது. ‘ எதையும் தைரியமாக சந்திக்க வேண்டும்’ என்றுதான் மத்திய அரசின் ஐஏஎஸ் அகாடமியில் எனக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. அதற்காக மத்திய, மாநில அரசுகளின் அதிகாரத்தை கேள்வி கேட்கும் எண்ணம் இல்லை. 
தமிழிசை என்னைப் பற்றி சொல்வதற்கு என்ன உரிமை இருக்கிறதோ அதுபோல சராசரி மனிதனாக நானும் பதில் சொல்ல முடியும். என்னுடைய கருத்தை சொல்வதற்கு ‘கான்ஸ்ட்டிடியூசனல் ரைட்ஸ்’ இருக்கிறது. நேர்மையாக உள்ளவர்களுக்கு ஆவேசம்… கோபம் இருக்கத்தான் செய்யும். மீடியாக்களில் என்னைப் பற்றி தவறுதலாக தகவல்கள் வெளியான சூழலில் என்னுடைய மனித உரிமையை காப்பாற்றவும், என்னுடைய குடும்ப வாழ்க்கை, மரியாதையை காப்பாற்றவுமே வெளியே வந்து பேசினேன்.
source: kaalamalar.net 

2016ல் புதிய உச்சத்தைத் தொட்ட சிரியா யுத்தம்

ஐந்து ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய சிரியா யுத்தம். 2016-ஆம் ஆண்டில் புதிய உச்சத்தைத் தொட்டிருக்கிறது.
கான்ஸ்டான்டிநோபிள், கெய்ரோ ஆகியவற்றைப் போல பழம்பெருமை கொண்ட நகரம் அலெப்போ. நவீன கால சிரியாவின் மிகப்பெரிய நகரம். 2016-ஆம் ஆண்டில் மிகப்பெரிய போர்க்களமாக மாறியிருக்கிறது. 2012-ஆம் ஆண்டில் சிரிய அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்கள் இந்த நகரைக் கைப்பற்றியபோது, சுமார் 21 லட்சம் பேர் இந்த நகரில் வாழ்ந்தார்கள். நான்கு ஆண்டுகளில் இந்த நகரம் சின்னாபின்னமாகியிருக்கிறது. 2016-ஆம் ஆண்டில் இந்த நகரின் மக்கள்தொகை வெறும் மூன்று லட்சமாகக் குறைந்துள்ளது. ரஷ்யப் படைகளின் ஆதரவுடன் கிளர்ச்சியாளர்களை அலெப்போ நகரை விட்டு விரட்டும் பணியை சிரியா ராணுவம் பிப்ரவரி மாதத்தில் மேற்கொண்டது. அலெப்போவின் கிழக்குப் பகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த கிளர்ச்சியாளர்கள், அங்கிருந்த பொதுமக்களை வெளியேற அனுமதிக்கவில்லை. பிப்ரவரி மாதம் 5-ஆம் தேதி இரு முக்கியப் பகுதிகளை சிரிய ராணுவம் கைப்பற்றியது.
ஜூலை மாதத்தில் கிளர்ச்சியாளர்களுக்கும், கிழக்கு அலெப்போ நகரில் சிக்கியிருந்த அப்பாவிப் பொதுமக்களுக்கும் அத்தியாவசிப் பொருள்கள் கொண்டு செல்லப் பயன்பட்ட சாலையை சிரிய ராணுவம் அடைத்தது. இதைத் தொடர்ந்து தாக்குதல் தீவிரமடைந்தது. ரஷ்ய விமானங்களும், சிரியாவின் ராணுவமும் வீசிய குண்டுகள் ஏராளமான கிளர்ச்சியாளர்களுடன் சேர்த்து அப்பாவிப் பொதுமக்களையும் கொன்றன. குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என யாரையும் இந்த யுத்தம் விட்டுவைக்கவில்லை. நவம்பர் மாதத்தில் ஐ.நா. வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, அலெப்போ நகரில் மட்டும் சுமார் ஒரு லட்சம் குழந்தைகள் ஆபத்தில் இருப்பதாகத் தெரியவந்தது. அக்டோபர் மாதத்தில் மட்டும் ரஷ்ய விமானங்களும் சிரிய ராணுவமும் நடத்திய தாக்குதல்களில் 90 குழந்தைகள் கொல்லப்பட்டதாக மதிப்பிடப்பட்டது.
கிளர்ச்சியாளர்கள் தரப்பிலும் பொதுமக்கள் வதைக்கப்பட்டனர். சித்திரவதை செய்வதற்கும் தனிமையில் அடைத்து வைப்பதற்கும் பல சிறைகளை கிளர்ச்சியாளர்கள் அமைத்திருந்தது கண்டறியப்பட்டுள்ளது.அலெப்போ நகரைப் போலவே பிற பகுதிகளிலும் இந்த ஆண்டு போர்கள் நடந்தன. ஒரு புறம் அமெரிக்கா, துருக்கி, சவுதி அரேபியா போன்ற நாடுகள் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாகவும், மறுபுறம், ஈரான், ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் சிரியாவின் அரசுப்படைகளுக்கு ஆதரவாகவும் பல இடங்களில் தாக்குதல்களை நடத்தின.
ஐ.எஸ். பயங்கரவாதிகளும், குர்து ஆயுதக் குழுவினரும் தனித்தனியாகத் சண்டையிட்டனர். இதில் யாருக்கும் உடனடி வெற்றி கிடைப்பதற்கான அறிகுறிகள் 2016-ஆம் ஆண்டில் தென்படவில்லை. அப்படியே யாரேனும் வெற்றிபெற்றால்கூட, அப்பாவிகளின் உடல்கள் புதைக்கப்பட்ட பூமியின்மீதுதான் அதைக் கொண்டாட முடியும்.

கும்பகோணத்தில் பிளஸ்-1 மாணவர் அப்துல் மஜித் கொலை: உடல் ஆற்றில் வீச்சு - பரபரப்பு

கும்பகோணத்தில் பிளஸ்-1 மாணவர் சமூக விரோதிகளால் படுகொலை  செய்யப்பட்டு உடல்  ஆற்றில் வீசப்பட்டு கிடந்தது. உடலை பார்த்து தந்தை மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

முஸ்லிம் பள்ளி மாணவர்களுக்கும் பாதுகாப்பு இல்லையா?
காவல்துறையை உன்மையான குற்றவாளிகளை உடனே கைது செய்..!!
தமிழக அரசே முஸ்லிம்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்...!

யா அல்லாஹ் என் சகோதரன் உயிரை பொருந்தி கொள்வாயாக..!!

கும்பகோணம் பைபாஸ் சாலை மாங்குடிஇரட்டை பிள்ளையார் கோவில் அருகில் காவிரி ஆறு பாலம் உள்ளது. இந்த பாலத்தின் அடியில் காவிரி ஆற்றில் 16 வயது மதிக்க தக்க வாலிபர் பிணமாக கிடந்தார்.

மாநிறம் உடைய அவர் கருப்பு கலர் பேண்டும், வெள்ளை நிற முழுக் கை சட்டையும் அணிந்து இருந்தார். அவரது உடலில் பலத்த காயங்கள் இருந்தது. எனவே அவர் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

இது குறித்து அப்பகுதி மக்கள் கும்பகோணம் தாலுகா போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்டவர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அப்போது அவர் பிளஸ்- 1 மாணவர் என்பது தெரிய வந்தது. அவரது பெயர் அப்துல் மஜித் (16) தாராசுரம் விநாயகர் நகரை சேர்ந்தவர்.

இவர் கும்பகோணத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். நேற்று மாலை 6-ம் வகுப்பு படிக்கும் தனது தம்பியை டியூசனில் இருந்து அழைத்து வருவதற்கு இரு சக்கர வாகனத்தில் சென்று உள்ளார்.

அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது தந்தை நிஜா மைதீன் நேற்று இரவு கும்பகோணம் தாலுகா போலீசில் புகார் செய்து இருந்தார். இந்த நிலையில் தான் இன்று காலை அப்துல் மஜீத் காவிரி ஆற்றில் கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்தது. அவரது உடலை பார்த்து தந்தை மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். மாணவர் அப்துல் மஜித் ஓட்டி வந்த இரு சக்கர வாகனம் அங்கு இல்லை. எனவே மாணவரை கொலை செய்து ஆற்றில் பிணத்தை வீசி விட்டு இரு சக்கர வாகனத்தை எடுத்து சென்று இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
source:http://www.muthupetmedia.com/

பீம் செயலி எப்படி செயல்படுகிறது?

இது ஆதார் எண்ணை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
ஆண்ட்ராய்டு ப்ளே ஸ்டோரில் இருந்து இந்த செயலியை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வியாபாரிகள் இந்த புதிய செயலியை தங்கள் மொபைல் ஃபோனில் பதிவிறக்கம் செய்வதோடு, பயோமெட்ரிக் பதிவுக் கருவியுடன் இணைக்க வேண்டும். இந்த செயலியில் வாடிக்கையாளர்கள் தனது ஆதார் எண்ணையும், எந்த வங்கி கணக்கில் பணப் பரிமாற்றம் செய்ய வேண்டும் என்பதையும் பதிவிட வேண்டும். விரல் ரேகையே இந்த பரிமாற்றத்திற்கான கடவுச் சொல்லாகப் பயன்படும். இதன் மூலம் ஆதார் எண் கொண்ட அனைவரும் ரொக்கமற்ற பரிமாற்றத்தை செய்ய இயலும். பொருட்களை வாங்கச் செல்லும் போது பணம் செலுத்த போன் வைத்திருக்க வேண்டிய கட்டாயமும் இல்லை.
இந்த செயலி எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்து பார்ப்போம்
இந்த செயலியை கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளவும். அதன் பிறகு பயன்பாட்டாளரின் வங்கி கணக்கையும், மொபைல் எண்ணையும் அதில் பதிவு செய்ய வேண்டும். இந்த செயல்பாட்டிற்கு பிறகு நீங்கள் பீம் செயலி மூலம் உங்கள் பரிவர்த்தனையை தொடங்கலாம்.
பீம் செயலியுடன் இணைக்கப்பட்டுள்ள வங்கிகள்:
அலகாபாத் வங்கி, ஆந்திரா வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, பாங்க் ஆப் பரோடா, பாங்க் ஆப் இந்தியா, பாங்க் ஆப் மகாராஷ்டிரா, கனரா வங்கி, கத்தோலிக்க சிரியன் வங்கி, சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா, டிசிபி வங்கி, பெடரல் பாங்க், எச்டிஎப்சி பாங்க், ஐசிஐசிஐ பாங்க், ஐடிபிஐ வங்கி, ஐடிஎப்சி வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர் சீஸ் வங்கி, இண்டஸ் இந்த் வங்கி, கர்நாடக வங்கி, கரூர் வைசியா பாங்க், கோடக் மஹிந்திரா வங்கி, ஒரியண்டல் பாங்க், பஞ்சாப் நேஷனல் வங்கி, ஆர்பிஎல்வங்கி, சௌத் இந்தியன் வங்கி, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, சிண்டிகேட் வங்கி, யூனியன் பாங்க் ஆப் இந்தியா, யுனைடேட் பாங்க் ஆப் இந்தியா, விஜயா வங்கி உள்ளிட்ட வங்கிகள் இந்த சேவையை வழங்குகின்றன.
எந்த மொழிகளில் இந்த செயலி உள்ளது?
பிரதமர் மோடி அறிமுகப்படுத்தியுள்ள இந்த புதிய செயலி தற்போது ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் மட்டுமே உள்ளது. விரைவில் இந்தியாவில் உள்ள பிற மாநில மொழிகளிலும் அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Hadis

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவரை ஒரு பெண்(ணின் அழகு) கவர்ந்து, அவரது உள்ளத்தில் தவறான எண்ணம் தோன்றினால், உடனே அவர் தம் மனைவியை நாடிச் சென்று, அவளுடன் உறவு கொள்ளட்டும். ஏனெனில், அது அவரது மனத்தில் தோன்றும் (கெட்ட) எண்ணத்தை அகற்றிவிடும்.
இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(ஸஹீஹ் முஸ்லிம்: 2719., அத்தியாயம்: 16. திருமணம்)

தீவிரவாத இயக்கம் RSS யை தடை செய்யுமா??

RSS கேரள மாநிலம் கண்ணூரில் ரகிசியமாக. நடத்தும்
ஆயுத பயிற்சி காலை 3 மணிக்கு தொடங்கின்ற பயிற்சி மக்கள் தெரியாமல் படம் பிடித்து உள்ளனர்
மனிதர்களை கொல்லுவதற்கும்
கை கால்களை முறிப்பதற்க்கும்
பயிற்சி கொடுக்கப்படுகின்றனர்
சிறுவர்களின் வாழ்க்கையை சீரழிக்கும் RSS
காலை 3 மணிக்கு பயிற்சி எடுப்பதற்கு என்ன காரணம்
கேரள CPM. அரசு நடவடிக்கை எடுக்குமா? ?
தீவிரவாத இயக்கம் RSS யை தடை செய்யுமா??

source: kaalaimalar.net 

50 நாட்கள் கடந்து விட்டது!விகடன் கருத்து கணிப்பு! மக்கள் பகீர் பதில்!!

 
கடந்த செப்டம்பர் 8 ஆம் தேதி 500, 1000 ரூபாய் பணத்தை மதிப்பிழப்பு செய்து பிரதமர் மோடி அறிவிப்பை வெளியிட்டார்.
நாடுமுழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கை என்பதால் மக்கள் அமைதி காத்தனர்.
பிரதமர் தனது அறிவிப்பில் 50 நாட்களுக்கு பிறகு நான் எடுத்த முடிவு தவறு என நீங்கள் நினைத்தால் என்னை கொளுத்துங்கள் என்றார்.
தற்போது 50 நாட்கள் கடந்த நிலையில் பிரதமரின் இந்த முடிவு குறித்து விகடன் கருத்து கணிப்பை நடத்தியுள்ளது. இதில் பண மதிப்பிழப்பு நடவடிக்கை எதிராகவே பெரும்பாலான மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

>இறைவனிடத்தில் பாவமண்ணிப்பு தேடுவோம்!



இறைவனிடத்தில் பாவமண்ணிப்பு தேடுவோம்!* *சகோதரர் .திருத்துறைபூண்டி மாலிக் அவர்களின் ஜனாஸா அடக்கத்திற்க்கு பின் சகோ.அல்தாஃபியின் இருதி நிமிட உரை!*

2016ல் விமானங்கள்.. காணாமல் போனவை... கடத்தப்பட்டவை... நொறுங்கி விழுந்தவை

2016 ஆம் ஆண்டு சோகமயமான சில விமானப் பயணங்களைக் கடந்து சென்றது. ஒரு சில விமானங்கள் நொறுங்கி விழுந்து பலர் உயிரிழந்தனர். காணாமல் போன விமானங்கள் சிலவற்றில் பயணம் செய்த பலர் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை. இதற்கிடையில் ஒரு விமானம் கடத்தப்பட்டு, அதில் இருந்த பயணிகளின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது.
விபத்துக்குள்ளான விமானங்கள்
கடந்த நவம்பர் 29 ஆம் தேதி பிரேசில் நாட்டு சாப்பகோயன்சி கால்பந்து அணி வீரர்கள் உட்பட 72 பேருடன் சென்ற சிபி2933 என்ற விமானம் விபத்துக்குள்ளாகியது. பொலிவியாவிலிருந்து புறப்பட்ட அந்த விமானம் போதியஎரிபொருள் இல்லாததால், கொலம்பியாவின் மலைப்பகுதியில் மோதி நொறுங்கியது.
இந்த விபத்தைத் தொடர்ந்து அடுத்த மாதத்திலேயே அடுத்தடுத்து 3 விமான விபத்துகள் நிகழ்ந்தன. டிசம்பர் 19 ஆம் தேதி ரஷ்யாவின் ஐஎல்-18 ரக விமானம், விழுந்து நொறுங்கியதில் 25 பயணிகள் மற்றும் 7 விமான பணியாட்கள் உட்பட மொத்தம் 32 பேர் பலியாயினர்.
டிசம்பர் 25 ஆம் தேதி 83 பயணிகள், 8 விமான படை வீரர்களுடன் சென்ற ரஷ்யாவின் டியு - 152 ரக விமானம் சிரியாவின் லடாகியா என்ற நகருக்கு மேல் பறக்கும் போது அதன் சிக்னல் துண்டிக்கப்பட்டது. பின்னர் கருங்கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. அதில் பயணம் செய்த 91 பேரும் உயிரிழந்தனர்.
காணாமல் போனவை
கடந்த ஜூலை 22-ம் தேதி சென்னையில் இருந்து போர்ட்பிளேயருக்கு சென்ற ஏஎன்32 விமானம் வழியில் காணாமல் போனது. அந்த விமானத்தில் மொத்தம் 29 பேர் பயணம் செய்தனர். சென்னைக்கு கிழக்கே 151 நாட்டிக்கல் மைல் தொலைவில் (300 கி.மீ) 23 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து திடீரென காணாமல் போனது. இந்த விமானப்படை விமானம் குறித்து தகவல் எதுவும் இல்லை.
கடத்தப்பட்ட விமானம்
டிசம்பர் 23 ஆம் தேதி லிபியாவைச் சேர்ந்த அப்ரிகியாஸ் ஏர்பஸ் ஏ320 விமானத்தை 118 பயணிகளுடன் தீவிரவாதிகள் கடத்தினர். அவர்கள் அந்த விமானத்தை மால்டா நாட்டிற்கு திசை திருப்பி தரையிறங்கச் செய்ததாக தகவல் வெளியானது. பின்னர் விமானத்தைத் தேடும் பணி நடந்தது. லிபியாவிலிருந்து 500 கிமீ தொலைவில் உள்ள சிறிய தீவான மால்டாவில் விமானம் இருப்பதற்கான சிக்னல் கிடைத்ததாக விமானத்தைத் தேடும் குழுவினர் தெரிவித்துள்ளனர். விமானத்தில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகளின் நிலை என்ன என்பது இதுவரை தெரியவில்லை.