திங்கள், 19 டிசம்பர், 2016

இந்தியாவில் மீன் இனங்கள் அழியும் அபாயம் – அதிர்ச்சி தகவல்

மும்பை : இந்தியாவின் கிழக்கு கடல் பகுதியில் பெரும்பாலான மீன் இனங்கள் அழியும் ஆபாய நிலை ஏற்பட்டுள்ளதாக மத்திய கடல் மீன்வளத்துறை ஆய்வு கழகம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
ஆய்வின்படி, இந்தியாவில் உள்ள 68 மீன் வகைகளில் சுமார் 47 வகைகள் அழியும் நிலையில் உள்ளது. குறிப்பாக ஒடிசா மற்றும் மேற்வங்க கடற்பகுதிகளில் மீன்கள் மிகுந்த அபாய கட்டத்தில் உள்ளன. தட்பவெப்பநிலை கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பது, குறைவான மீன் உற்பத்தி உள்ளிட்டவைகள் இதற்கு முக்கிய காரணம். தட்டவெப்ப நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் பல அரிய வகை மீன்கள் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts: