தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தெற்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டியுள்ள வடக்கு சுமத்ரா தீவுப்பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. அடுத்து வரும் 24 மணி நேரத்தில் அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுவையில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சென்னையை பொருத்தவரை நகரின் சில பகுதிகளில் விட்டு விட்டு லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சிவகிரியில் 6 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
பதிவு செய்த நாள் : December 04, 2016 - 02:32 PM