திங்கள், 1 மே, 2017

குழந்தைகளை தத்தெடுப்பதற்கான புதிய விதிமுறை இன்று முதல் அமல்! May 01, 2017

குழந்தைகளை தத்தெடுப்பதற்கான புதிய விதிமுறை இன்று முதல் அமல்!


குழந்தைகளை தத்தெடுப்பதற்கான புதிய விதிமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. 

குழந்தைகளை தத்தெடுக்க விரும்பும் பெற்றோர், அதற்கான இணையதளமான கேரிங்ஸ் மூலம் பதிவு செய்து, பரிந்துரைக்கப்பட்ட 3 குழந்தைகளில் ஒன்றை தத்தெடுத்து வருகின்றனர். 

தற்போது நடைமுறையில் உள்ள இந்த நடைமுறைக்கு பதிலாக, புதிய விதிமுறை இன்று அமலுக்கு வருகிறது.  

தத்தெடுப்புக்கான பரிசீலனை காலம் மிக அதிகமாக உள்ளதை கருத்தில் கொண்டு, அதனை எளிமையாக்கும் வகையில், புதிய நிடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, தத்தெடுப்பு தொடர்பாக 3 கட்டங்களில், தலா ஒரு குழந்தையின் சுயவிவரங்கள் அனுப்பி வைக்கப்பட்டு, 48 மணி நேரத்துக்குள் பெற்றோர் அதனை ஏற்றுக் கொள்ளவோ அல்லது நிராகரிக்கவோ வேண்டும். 

குழந்தையை ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில், இதற்கான நீதிமன்ற நடைமுறையை விரைந்து முடிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.