செவ்வாய், 2 மே, 2017

10,000 அமெரிக்கர்களை பணிக்கு அமர்த்துகிறது இன்ஃபோசிஸ்! May 02, 2017

ஹெச்-1பி விசா விவகாரம் எதிரொலியாக 10,000 அமெரிக்கர்களை பணியமர்த்த இன்ஃபோசிஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் ஐடி நிறுவனமான இன்போசிஸ் மற்றும் டாடா கன்டல்சன்ஸி, விப்ரோ உள்ளிட்ட நிறுவனங்கள் அமெரிக்காவின் ஹெச்.1பி விசா விவகாரத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டன.

ஐ.டி உள்ளிட்ட துறைகளில் அமெரிக்கர்களின் வேலை வாய்ப்பை உறுதிப்படுத்தும் வகையில், அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்றதும் ஹெச்-1பி விசா வழங்குவதற்கு கட்டுப்பாடுகளை கொண்டுவந்தார். 

டிரம்பின் நடவடிக்கை இந்தியா போன்ற நாடுகளில் இருந்து அமெரிக்கா செல்லும் தொழிலாளர்களை கடுமையாக பாதித்தது. இந்தியாவின் 150 பில்லியன் டாலர் ஐ.டி துறை இதன் மூலம் கடுமையான பாதிப்புக்குள்ளானது. இருந்த போதிலும், தனது நாட்டு தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித்தரும் அமெரிக்காவின் முடிவை இன்போசிஸ் பாராட்டியுள்ளது.

இந்நிலையில், தனது பணிகள் பாதிக்காத வண்ணம், 10,000 அமெரிக்கர்களை பணிக்கு அமர்த்த இன்போசிஸ் முடிவு செய்துள்ளது. அமெரிக்காவில் 4 டெக்னாலஜி சென்டர்களை உருவாக்கி அங்கு அவர்களை பணியமர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Related Posts: