செவ்வாய், 2 மே, 2017

இணையத்தில் எளிதில் கிடைக்கும் 13 கோடி மக்களின் ஆதார் எண்கள்! May 02, 2017

மத்திய அரசால் பாதுகாக்கப்படுவதாக கூறப்படும் சுமார் 13 கோடி ஆதார் எண்கள் இணையத்தில் யாரும் எளிதில் பயன்படுத்தும் வகையில் உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

வங்கிகள் பயன்பாடு, வேலை வாய்ப்பு உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு திட்டங்களுக்காக ஆதார் எண்கள் பதிவு செய்யப்படுகின்றன. இந்நிலையில், தேசிய வேலை வாய்ப்பு உறுதித்திட்டம் உள்ளிட்ட திட்டங்களில் ஆதார் எண்கள் பயன்படுத்தப்பட்டு வரும் 13 கோடி ஆதார் எண்கள் இணையத்தில் எளிதில் மற்றவர்கள் பயன்படுத்தும் வகையில் இருப்பதோடு சுமார் 10 கோடி வங்கி பயணர்களின் பதிவெண்களும் எளிதில் பயன்படுத்தப்படும் வகையில் இணையத்தில் உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதனை பயன்படுத்தி பொருளாதார குற்றங்களில் ஈடுபட முடியும் எனவும் கூறப்படுகிறது. மத்திய அரசின் ஆதார் ஆணையத்தால், ஆதார் குறித்த தகவல் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், அரசின் திட்டங்களுக்காக பயன்படுத்தப்படும் ஆதார் எண்கள் பாதுகாப்பற்ற முறையில் இணையத்தில் இருப்பது அரசின் மீது கேள்வியை எழுப்பியுள்ளது. 

Related Posts: