ஞாயிறு, 28 மே, 2017

தோல் செருப்பு இல்லாமல் நடமாடுங்களே.. பாஜக தலைவர்களுக்கு குஷ்பு குட்டு!

சென்னை: மாட்டு இறைச்சிக்கு தடை விதித்துள்ள பாஜகவின் தலைவர்கள் தோல் செருப்பு இல்லாமல் நடமாடுவார்களா? என காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் நடிகை குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக நடிகை குஷ்பு கூறியதாவது:
என் தட்டில் என்ன உணவு இருக்க வேண்டும் என்பது என்னுடைய உரிமை. இதைத்தான் சாப்பிடனும், உடுத்த வேண்டும், படிக்க வேண்டும் என யாரும் கட்டுப்பாடு விதிக்க கூடாது.
உலகிலேயே மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியா முன்னணியில் இருக்கிறது. அதுவும் பாஜக ஆட்சியில்தான் இரு மடங்காக மாட்டிறைச்சி ஏற்றுமதி அதிகரித்துள்ளது.
தாவரங்களுக்கும் உயிர்கள் இருக்கிறதுதானே.. அதனால் காய்கறி, பழங்களை யாருமே சாப்பிடக் கூடாது எனவும் தடை விதிப்பார்களோ?
மாட்டு இறைச்சிக்கு தடை விதிக்கும் பாஜகவினர் தோல் பொருட்கள் எதனையும் பயன்படுத்தாமல் இருப்பார்களா? பெல்ட்டுக்கு பதில் நாடா கயிறு கட்டிக் கொள்ளட்டும்.
இந்தியாவிலேயே தமிழகத்தில் இருந்துதான் 40% தோல் ஏற்றுமதி நடக்கிறது. இத்தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு மிகப்பெரிய நட்டம் உருவாக்கப்படுகிறது.
இவ்வாறு நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.

http://kaalaimalar.in/kushboo-vs-modi-beef-banned-issue/

Related Posts:

  • பெருமக்கள் எச்சரிக்கை... Read More
  • பர்மா முஸ்லிம்களுக்கு உதவ நல்வாய்ப்பு ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ மியான்மர் முஸ்லிம்கள் 19 பேர் அகதிகளாகதூத்துக்குடி வந்துள்ளனர். அந்தப் 19 பேருக்கும் எல்லா விதமான உதவிகள… Read More
  • மறைக்கப்பட்ட வரலாறு.. இந்திய சுதந்திர போரட்டத்தில் முஸ்லம்களின் பங்கு என்ன என்பதை அறிந்துகொள்வோம் வாருங்கள்... அன்று வெள்ளையனே வெளியேறு என்று வீர முழக்கதோடு போரட்டத… Read More
  • பாலியல் கொடுமை உடன்குடி அருகில் உள்ள குலசேகரன்பட்டினத்தில் குரவர் சமூகத்தை சார்ந்த சிறுமியை ‪#‎இந்து_முன்னணியை‬ சேர்ந்த காமவெறி பிடித்த மிருகங்கள் பாலியல… Read More
  • Quran-இணை வைத்து வணங்குபவர் நிச்சயமாக இப்றாஹீம் அல்லாஹ்வுக்கு மிக்க பயந்து நடக்கும் நேரானதொரு வழிகாட்டியாக இருந்தாரேயன்றி (இறைவனுக்கு) இணை வைத்து வணங்குபவர்களில் அவரும் (ஒருவரா… Read More