கட்டப்பஞ்சாயத்து நிகழ்ச்சியால் மீண்டும் சர்ச்சை! அம்பலமான உண்மை! கிழிந்தது முகத்திரை !! – வைரல் வீடியோ
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சி பல சமயங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியது அனைவரும் அறிந்த விஷயமே. சமீபத்தில் மீண்டும் அந்த நிகழ்ச்சியால் ஏற்பட்டுள்ள சர்ச்சைக்கு, லட்சுமி ராமகிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார்
சமீபத்தில் ஒளிபரப்பான குழந்தை மீதான பாலியல் வன்முறை மற்றும் தாக்குதல் தொடர்பான பகுதி பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதனால் நிகழ்ச்சி தொகுப்பாளர் லட்சுமி ராமகிருஷ்ணனை பலர் அவருடைய ட்விட்டர் பக்கத்தை குறிப்பிட்டு கடுமையாக சாடினார்கள். அனைவரது கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார்.
இந்த நிகழ்ச்சி குறித்து லட்சுமி ராமகிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில் அளித்த விளக்கத்தில், சமீபத்தில் ஒளிபரப்பான பகுதியில், பாதிக்கப்பட்ட பெண் குழந்தையை பெற்ற பின், அந்த பெண்ணின் குடும்பம், குற்றம்சாட்டப்பட்ட நபர் மீது 7 வருடங்களுக்கு முன்பு தொடர்ந்த வழக்கை திரும்பப் பெற்றது. மேலும்,தவறு செய்தவர் நிதியுதவி அளிப்பதாக கூறியுள்ளார்.
அப்பெண் போலீஸுக்கு செல்லாமல் குற்றத்தை வெளியில் கொண்டு வர வேண்டும் என்பதற்காக சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு வந்தார். இந்நிகழ்ச்சி இல்லையென்றால் அவர் மேலும், அமைதியாக பாதிப்பை சந்தித்து கொண்டே இருந்திருப்பார். குற்றவாளியும் எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் வாழ்ந்திருப்பார்.
அப்பெண், இப்போதும் புகாரளிக்க மறுத்துவிட்டது உண்மை தான். எங்களால் அவரை சமாதானப்படுத்த முடியவில்லை. ஆனால் குற்றம் வெளியே வந்ததால், சிறிய விழிப்புணர்வு உண்டாக்க முடிந்தது. குறிப்பாக, குற்றவாளிக்கும், அவரை போன்றவர்களுக்கும் இனி குற்றம் வெளியே வரும் என்ற பயம் இருக்கும். பாதிக்கப்பட்டவர்கள் இப்படி பொது ஊடகத்தின் முன்பு வந்துவிடுவார்கள் என்பது தெரியும்.
அந்த சூழலில் எது சரியானதோ அதை செய்தோம். பாதிக்கப்பட்டவர்கள் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை விட, முறையிட வேறு எளிய நடைமுறைகள் வரும்போது இந்நிகழ்ச்சி முடிவுக்கு வரும்.