தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், கடும் வறட்சியால் தென்னை மரங்கள் காய்ந்து வருவதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தருமபுரி, பென்னாகரம், பாலக்கோடு, காரிமங்கலம், பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் உட்பட தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 7 ஆயிரம் ஹெக்டேரில், தென்னை சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்தாண்டு பருவமழை பொய்த்ததால், நீர் நிலைகள் மற்றும் விவசாய கிணறுகளில், நீர்மட்டம் பாதிக்கப்பட்டுள்ளது.
கடும் வறட்சி காரணமாக தென்னை மரங்கள் காய்ந்து வருகின்றன. இதனால் மனமுடைந்த தென்னை விவசாயிகள், தமிழக அரசு தங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.