வியாழன், 4 மே, 2017

பாஜக அரசுக்கு கலவரத்தை உருவாக்க மட்டும்தான் தெரியும் : மம்தா May 03, 2017

பாஜக அரசுக்கு கலவரத்தை உருவாக்க மட்டும்தான் தெரியும் : மம்தா


பாலிவுட் நடிகை கஜோல் கலந்துகொண்ட விருந்தில் மாட்டுக்கறி பறிமாறப்பட்டது தொடர்பாக எழுந்த சர்ச்சை குறித்து பேசிய மம்தா பானர்ஜி, பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்தார்.

கடந்த ஞாயிற்று கிழமை நடிகை கஜோல் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் லைவ் வீடியோ ஒன்றை பகிருந்திருந்தார். அப்போது, விழா ஒன்றில் கலந்துகொண்டிருந்த கஜோல் தன் நண்பர் செய்து பரிமாறிய உணவை உண்டார். அந்த உணவை பற்றி லைவ் வீடியோவில் பேசிய அவரின் நண்பர், அது மாட்டுக்கறியால் செய்யப்பட்ட உணவுவகை என்று அறிமுகம் செய்துவைத்தார். இதையடுத்து கஜோல் எப்படி மாட்டுக்கறி சாப்பிடலாம் என கேள்வி எழுப்பி இணையத்தில் பலரும் விமர்சனம் செய்யத்தொடங்கினர். இதையடுத்து தன்னுடைய ட்விட்டர் வீடியோவை நீக்கிய கஜோல் தான் சாப்பிட்டது மாட்டுக்கறிய அல்ல எறுமை மாட்டுக்கறி எனவும் விளக்கம் அளித்திருந்தார். 

இதுகுறித்து பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய மேற்கு வங்க முதல் மம்தா பானர்ஜி, பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து மக்கள் உணவு விஷயத்தில் கூட பயப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். ‘நாம் ஏன் இவர்களுக்கெல்லாம் பயப்பட வேண்டும்’ என பொதுமக்களை பார்த்து ஆவேசமாக பேசிய அவர், தன்னை பலமுறை சி.பி.ஐ வைத்து மத்திய அரசு மிரட்டியுள்ளதாகவும், ஒட்டுமொத்த திரிணாமுல் காங்கிரஸ் காரர்களையும் சிறைக்கு அனுப்பினால்கூட அவர்களுக்கெல்லாம் தான் அஞ்சப்போவத்தில்லை எனவும் தெரிவித்தார்.

மேலும், பாஜக அரசு இந்து மக்களுக்காக எதையும் செய்ததில்லை என விமர்சித்த மம்தா, பாஜகவிற்கு கலவரத்தை உண்டாக்க மட்டும்தான் தெரியும் எனவும் ஆவேசமாக பேசினார்.

Related Posts: