வெள்ளி, 5 மே, 2017

அப்படி என்னதான் இருக்கிறது வைரலாகப் பரவும் ஃபேஸ் அப்பில்?! May 05, 2017




உலகம் முழுவதும் ஸ்மார்ட்போன் சந்தையை ஆக்கிரமித்து வைத்திருப்பது ஆண்ட்ராய்டு போன்கள் தான். அதற்கு காரணம் பயன்படுத்துவதில் உள்ள எளிமை, யூசர் ப்ரண்ட்லி என்பதைத் தாண்டி கோடிக்கணக்கில் குவிந்து கிடக்கும் அப்ஸ்கள் தான்.

ஆண்ட்ராய்ட் செயலியில் இயங்கும் ஆப்கள் பலரது வேலைகளை இலகுவாக்கியிருக்கிறது. வேலைகளுக்கானது என்பதைத் தாண்டியும் விளையாட்டு ஆப்கள், கேமரா, மார்பிங் ஆப்கள் எல்லாருடைய மொபைல்களையும் வியாபித்திருக்கும். சில ஆப்கள் வெளியான புதிதில் வைரலாகப் பரவி அனைவரது கவனத்தையும் பெறும். சமீபத்தில் ப்ரிஸ்மா ஆப் வெளியாகி அனைவரையும் ப்ரிஸ்மா பைத்தியம் பிடித்து அலைய வைத்தது. கோடிகணக்கான அளவில் தரவிரக்கம் செய்து உபயோகப்படுத்தப்பட்டது.

அந்த வகையில் தற்போது வெளியாகி பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது ஃபேஸ் ஆப் (face app). அந்த ஆப்பில் உள்ள சிறப்பு நம் புகைப்படத்தை எடுத்து அதில் அப்லோட் செய்துவிட்டால் போதும். அதில் இருக்கும் வசதிகள் மூலம் பல்லைக்காட்டிக் கொண்டு சிரிப்பது போலவும், நமது இள வயதுத் தோற்றம் மற்றும் முதிய தோற்றம் ஆகியவற்றை கொண்டுவர முடியும். இது போன்ற ஆப்கள் ஆயிரக்கணக்கில் கொட்டிகிடந்தாலும் மற்ற ஆப்களை போல் அல்லாமல் உண்மையில் நாம் முதிய வயதில் இப்படிதான் இருப்போமோ? என்று பயனாளரை எண்ண வைக்கும் அளவிற்கு துல்லியம் காட்டுகிறது. அதில் முகத்தை பெண் முகம் போல மாற்றும் வசதி நம்மையே வெட்கப்பட வைக்கும் அளவிற்கு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆப்கள் வெளியாகி சமூக வலைதளங்களை ஆக்கிரமித்து பின் காணாமல் போவதுண்டு. அந்த வகையில் ஃபேஸ் ஆப் தான் அடுத்த சில மாதங்களுக்காவது பயனாளர்களை ஆக்கிரமித்திருக்கும் என்பது துணிபு.

இந்த ஆப்பை கூகிள் ப்ளே ஸ்டோரில் தரவிறக்கம் செய்து நீங்களும் பயன்படுத்தி உங்கள் கடந்த காலம் மற்றும் எதிர்கால முகத்தை பார்த்து கொள்ளுங்கள்.

Related Posts:

  • தெலங்கானா தெலங்கானா உறுதியாகிவிட்டது. பல்லாண்டுகால மக்கள் போராட்டம் வெற்றிபெற்றுவிட்டது. இன்றைக்கு தெலங்கானா பிரிவினையை எதிர்த்து எழுத முற்படுவது வெகுஜன விரோ… Read More
  • பாவங்கள் மன்னிக்கப்படும் ஒவ்வொரு ஐவேளைத் தொழுகைக்காகவும்உபரியான தொழுகைக்காகவும் நாம்செய்யும் உளூவின் மூலம் பாவங்கள் மன்னிக்கப்படும்.எனவே ஒவ்வொரு தொழுகைக்கும் உளூச்செய்யும் வழ… Read More
  • ஐவேளைத் தொழுகைக் ஐவேளைத் தொழுகைக்காக விரைவாகச் சென்று அதை நிறைவேற்ற காத்திருந்தால் அந்த நேரத்தில் வானவர்கள் நமக்காக பாவமன்னிப்பு தேடுவார்கள். அல்லாஹ்வின் தூதர் (… Read More
  • Jobs - UAE Procurement OfficerCategory: Sales and Marketing Type: Full TimeExperience: 2 - 5 YearsEducation: Bachelor of ScienceLocation: SharjahSalar… Read More
  • நீரிழிவு நோய் தாக்குவதற்கான ஆபத்து குறைகிறது தினமும் பழங்களைச் சாப்பிட்டுவந்தால், நீரிழிவு நோய் தாக்குவதற்கான ஆபத்து குறைகிறது எனப் புதிய ஆய்வு… Read More