சனி, 6 மே, 2017

மோசடி புகாரில் தமிழக அமைச்சர் காமராஜ் மீது வழக்குப் பதிவு! May 06, 2017

தமிழக அமைச்சர் காமராஜ் மீது, மன்னார்குடி காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கட்டட ஒப்பந்ததாரர் குமார் என்பவரிடம் 30 லட்ச ரூபாய் மோசடி செய்ததாக அமைச்சர் காமராஜ் மீது புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த புகாரை, தமிழக காவல்துறை பதிவு செய்ய மறுப்பதாகக் கூறி குமார் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. 

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், காமராஜ் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. இதனையடுத்து, அமைச்சர் காமராஜ் மீது மன்னார் குடி காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இது குறித்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு அறிக்கை அளித்துள்ளது. அதில், குமாரின் குற்றச்சாட்டு தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்த கடந்த 3ம் தேதி அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், எனினும், விசாரணைக்கு அவர் ஆஜராகவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 அவர் மீது ஏற்கனவே, கிரிமினல் வழக்கு உள்ளதால் அவர் ஆஜராகவில்லை என்று அரசு கருதியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், காமராஜ் மீது குமார் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு தொடர்பாக தமிழக காவல்துறை உரிய விசாரணையை மேற்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Posts: