திங்கள், 15 மே, 2017

போக்குவரத்துத் தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தம் தொடங்கியதால் போக்குவரத்து முடக்கம்! May 15, 2017




அரசு போக்குவரத்து தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஒட்டி, சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அரசு பேருந்துகளின் போக்குவரத்து முடங்கியது. இதனால், இரவுப் பயணத்திற்கு வந்திருந்த பயணிகள் கடும் அவதியடைந்தனர்.

ஊதிய உயர்வு, ஓய்வூதிய பலன்கள் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தால் கோயம்பேடு பேருந்து நிலைத்தில் நேற்று  அரசு பேருந்துகள் இயக்கம் பெருமளவு தடைபட்டது. இதனால் சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு செல்ல வேண்டிய பயணிகளும் புறநகர் செல்ல வேண்டிய பயணிகளும் கடும் அவதிக்குள்ளாகினர்.

அரசு போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை முன்னிட்டு வெளியூர்களுக்கு பயணிகளை ஏற்றிச் செல்ல தனியார் பேருந்துகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன. ஆனால் தனியார் பேருந்துகள் அதிகளவில் கட்டணம் வசூல் செய்வதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.