ஞாயிறு, 11 ஜூன், 2017

ஐ.நா. மனித உரிமை கவுன்சிலுக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை June 11, 2017



தமிழர்களுக்கு எதிராக இலங்கை ராணுவம் நிகழ்த்திய இனப்படுகொலைகள், போர்க்குற்றங்கள் மற்றும் கொடூரமான மனித உரிமை மீறல்கள் பற்றி விசாரிக்க சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய ஒரு நம்பகமான, சுதந்திரமான சர்வதேச விசாரணையை நடத்த வேண்டுமென திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஐநா மனித உரிமைகள் ஆணையத்தின் துணை உயர் ஆணையாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில், இலங்கை வாழ் தமிழர்களின் நலன்களில் இரண்டறக் கலந்து இருக்கும் தமக்கு, இது மிக முக்கியமான தருணம் என கூறியுள்ளார்.

போர் மேகங்கள் மூளும் போதெல்லாம் அப்பாவித் தமிழர்களின் மீது இரக்கமற்ற இராணுவத் தாக்குதல் நடத்தப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ள ஸ்டாலின், இதுவரை இலங்கை ராணுவம் தமிழர்களுக்கு எதிராக நடத்திய இனப்படுகொலைகள், உலக வரலாற்றில் இல்லாத அளவுக்கு, மிகப்பெரிய கொடுமையாகப் பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளார். 

தமிழர்களுக்கு எதிராக இலங்கை ராணுவம் நிகழ்த்திய இனப்படுகொலைகள், போர்க்குற்றங்கள் மற்றும் கொடூரமான மனித உரிமை மீறல்கள் பற்றி விசாரிக்க சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய ஒரு நம்பகமான விசாரணை தேவை என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தமிழர்கள் சுயமரியாதையுடன் வாழ, இலங்கையில் நீண்ட காலமாக மறுக்கப்பட்டு வரும் அரசியல் தீர்வு அவர்களுக்கு நிச்சயம் தேவை என கூறியுள்ள ஸ்டாலின், வெளிநாடுகளில் வசித்து வரும் புலம்பெயர் ஈழத்தமிழர்களையும் உள்ளடக்கிய ஈழத்தமிழர்கள் மத்தியில் நடத்தப்படும் பொதுவாக்கெடுப்பு மட்டுமே தீர்மானிக்க முடியும் என்று உறுதியாக நம்புவதாக தெரிவித்துள்ளார்.

Related Posts: