வரம் தந்த சாமி தலையில் கைவைத்தது போல் இருக்கிறது ஜெயக்குமாரின் பேச்சு எனவும் நிதி அமைச்சர் ஜெயக்குமார் அதிமுகவின் செய்தி தொடர்பாளரா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி முதல் நிலை வேட்பாளராக தேர்வு செய்யப்பட்ட போது அவருக்கு மிகவும் பக்க பலமாக இருந்தது அமைச்ச்சர்களே.
எம்.எல்.ஏக்கள் சிலருக்கு அதிருப்தி ஏற்பட்ட போது அமைச்சர்கள் தான் அவர்களிடம் பேசி நிலையை சரிகட்டியுள்ளனர். மேலும் எடப்பாடி ஆட்சி அமைந்தால் செய்ய வேண்டியதை செய்வோம் எனவும் வாக்குறுதி அளித்துள்ளனர்.
இதனால் எம்.எல்.ஏக்கள் எடப்பாடிக்கு வாக்கு அளித்தனர். இதைதொடர்ந்து எடப்பாடி தலைமையிலான ஆட்சி தமிழகத்தில் காலூன்றியது.
பின்னர், அமைச்சர்கள் எடுக்கும் முடிவுக்கு எடப்பாடியும் ஒத்து ஊத ஆரம்பித்தார்.
இதைதொடர்ந்து கட்சியில் இருந்து தினகரனை ஒதுக்கி வைக்க வேண்டும் என ஒ.பி.எஸ் தரப்பினர் கோரிக்கை விட்ட போது அமைச்சர்கள் முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தினர்.
இதற்கும் எடப்பாடி ஒப்புதல் தர தைரியமாக வெளியே வந்து அமைச்சர்கள் தினகரனை ஒதுக்கி வைப்பதாக அறிவித்தனர்.
இதையடுத்து இரட்டை இலை விவகாரத்தில் சிறைக்கு சென்று திரும்பிய தினகரனை கட்சியில் சேர்க்ககூடாது என அமைச்சர்கள் முடிவெடுத்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் தங்கள் நிலைப்பாட்டில் தாங்கள் உறுதியாக உள்ளோம் எனவும் தினகரன் அறிவித்தபடி அவர் கட்சியை விட்டு விலகியிருப்பதே அவருக்கு நல்லது எனவும் தெரிவித்தார்.
மேலும் இன்று தலைமை செயலகத்தில் உள்ள அனைத்து அமைச்சர்கள் அறையிலும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வரிசையில் எடப்பாடி படம் வைக்கப்பட்டது.
இதைதொடர்ந்து இன்று அதிமுக எம்.எல்.ஏக்கள் 29 பேர் தினகரனை சந்தித்து ஆதரவு தெவித்தனர்.
மேலும் தினகரன் ஆதரவாளர்கள் பலர் ஜெயக்குமாரின் கூற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேட்டியளித்தனர்.
அந்த வரிசையில் தற்போது நாஞ்சில் சம்பத் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தலைமை செயலகத்தில் முதலமைச்சரின் படத்தை வைப்பது மரபுதான் எனவும் கட்சியை காப்பாற்றும் முயற்சியில் டிடிவி தினகரன் இறங்கியுள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் வரம் தந்த சாமி தலையில் கைவைத்தது போல் இருக்கிறது ஜெயக்குமாரின் பேச்சு எனவும், நிதி அமைச்சர் ஜெயக்குமார் அதிமுகவின் செய்தி தொடர்பாளரா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.