பேஸ்புக் நிறுவனம் அவ்வப்போது புதுமைகளை புகுத்தி வருவதாலே சமூக வலைத்தளங்கள் பட்டியலில் இன்றளவும் முதலிடம் பெறுகிறது. facebook-beef-sticker-modi/
2004 ஆம் ஆண்டு ஆரம்பித்து இன்று கிடத்தட்ட பல பில்லியன் மக்களை தன் வாடிக்கையாளராக தன் பக்கம் ஈர்த்துள்ளது.
இதன் விசேசம் என்னவென்றால் ஒரு நாட்டிற்கு தகுந்தவாறே அதன் சேவைகளை வழங்குவது தான்.
இருப்பிடத்தை அறிய வசதி, ஆபத்து காலங்களில் தெரிந்தவர்கள் பாதுகாப்பாக உள்ளனரா என்று அறிந்து கொள்ளும் வசதி போன்ற பல எண்ணற்ற உள்ளூர் சார்ந்த சேவைகளை அளிப்பதால் மக்களிடையே வெகு பிரசித்தி பெற்றது.

இந்த நிலையில் தற்போது இந்தியாவில் மாட்டிறைச்சி தடை பற்றி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த செய்தியை அறிந்து கொண்ட அந்த நிறுவனம்.
ஒரு மாடு இந்திய கொடியை பிடித்து ஆட்டுவது போன்ற ஸ்டிக்கர் வெளியிட்டுள்ளது. இது உணர்த்துவதை பார்த்தல் ஒரு நாடே மாடுகாக கொடி பிடித்து களத்தில் இறங்கியது போல உள்ளது.
அப்படியில்லை என்றால் ஒரு நாட்டின் ஆட்சியே மாட்டை மையப்படுத்தி இருக்கிறது என்பதை உணர்த்த வருகிறது.
எது எப்படியாயினும் உலக அளவில் இந்த பிரச்சனை விளையாட்டாக பரவியுள்ளது பல நாடுகள் மத்தியில் இந்தியாவை கேலிக்குண்டாக்க வைக்கும் என்பதில் ஐயமில்லை.
http://kaalaimalar.in/facebook-beef-sticker-modi/