சனி, 3 ஜூன், 2017

உலகின் மிக பழமையான அணைகளில் ஒன்று இந்த கல்லணை.

how-buit-by-kallanai
 
திருச்சி அருகே காவிரியின் குறுக்கே கட்டப்பட்டது கல்லணை. கரிகால சோழனால் கட்டப்பட்ட சுமார் 1900 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. 2ம் நூற்றாண்டில் எந்த நவீன வசதிகளும் இல்லாத காலத்தில் எப்படி இப்படி ஒரு வலிமையான அணையை கட்ட முடிந்தது என உலகின் தலைசிறந்த நவீன பொறியாளர்கள் ஆச்சரியப்படுகின்றனர். (how-buit-by-kallanai)
உலகின் மிக பழமையான அணைகளில் ஒன்று இந்த கல்லணை. பழமையான அணைகளில் இன்றளவும் சிதையாமல் அப்படியே இருப்பதும் இந்த கல்லணைதான் மட்டும்தான். அணை கட்டப்பட்டது கிபி 2ம் நூற்றாண்டு. அப்போது காவிரியில் பெரும் வெள்ளம் வந்து விவசாய நிலங்கள் மற்றும் கிராமங்களை அழித்து வந்தது. இதனை தடுக்க காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்ட கரிகால சோழன் முடிவு செய்தார்.
அந்த காலக்கட்டத்தில் நவீன தொழில்நுட்பம் கிடையாது. கடல் அலை தொழில்நுட்ப அடிப்படையில் இந்த அணை கட்டப்பட்டது. அதாவது நாம் கடல் அலையில் கால் வைக்கும்போது மணலில் புதைந்து நமது கால்கள் தரையை தொடும்.
அதே பார்முலா இந்த கல்லணைக்கு பயன்படுத்தப்பட்டது. அதன்படி ஆற்றில் வெள்ளம் வரும் நேரத்தில் பெரிய பெரிய பாறைகள் காவிரியின் குறுக்கே போடப்பட்டது. அந்த பாறைகள் வெள்ளம் வடிந்த பின்னர் தரையில் ஆழமாக பதிந்தன. பின்னர் நீரால் அரித்து செல்ல முடியாத ஒருவகை பசை கொண்டு பாறைகள் மீது கலவை போல பூசப்பட்டன.
அந்த பசை பாறைகளை ஒன்றோடு ஒன்றாக இறுக பற்றி கொண்டது. மேலும் சில தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அது என்ன என்பது தெரியவில்லை. அதனால்தான் இன்றளவும் கல்லணை உறுதியோடு உள்ளது.
உலகின் பழமையான எத்தனையோ அணைகள் இருந்த தடம் இல்லாமல் மறைந்து விட்டது. ஆனால் கல்லணை மட்டும் இன்னும் தமிழனின் பெருமையை உலகிற்கு பறைசாற்றி கொண்டிருக்கிறது.