புதுச்சேரி அரசியல்வாதிகள், அதிகாரிகள் குறித்து சமூகவலைதளங்களில் அவதூறு பரப்புவதை ஆளுநர் கிரண்பேடி நிறுத்திக் கொள்ள வேண்டும் என முதல்வர் நாராயணசாமி எச்சரித்துள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிந்ததில் முதல்வர் நாராயணசாமி சென்டாக் மருத்துவபட்டமற்படிப்பு மாணவர் சேர்க்கை தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு பேசினார். அதில் கடந்த 30-ம் தேதி ஆளுநர் கிரண்பேடி, சென்டாக் அலுவலகத்துக்கு சென்று சில மாணவர்களுக்கு அரசு ஒதுக்கீட்டு கடிதங்களை வழங்கும்படி உத்தரவிட்டுள்ளது தவறான செயல்பாடாகும் என குறிப்பிட்டார். வெளிப்படையாக நேர்மையாக ஆன்லைன் முறையில் மாணவர்களை தேர்வு செய்துள்ளதாகவும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை ஆளுநர் கூறக்கூடாது எனவும் முதல்வர் நாரயணசாமி தெரிவித்துள்ளார்.