சனி, 3 ஜூன், 2017

உலக அழிவிற்கு வித்திடும் ட்ரம்ப்! June 02, 2017

புவி வெப்பமயமாதலை தடுக்க உலக நாடுகளின் ஒத்துழைப்புடன் கடந்த ஆண்டு போடப்பட்ட பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதாக அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

பல ஆண்டுகள் நடைபெற்ற சிக்கலான பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் கடந்த ஆண்டு கையழுத்தானது பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தம். இந்த ஒப்பந்தத்திற்கான முக்கிய நோக்கமே புவிவெப்ப மயமாதலை 2 டிகிரி செல்சியஸுக்கு மிகாமல் கட்டுப்படுத்துவதுதான்.  புவி வெப்பமடைதலுக்குக் காரணமான கார்பன் டை ஆக்சைடு உள்ளிட்ட பசுமை இல்ல விளைவு வாயுக்கள் ( green house gas) வெளியேற்றத்தை பெருமளவில் கட்டுக்குள் கொண்டுவரவே இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த ஒப்பந்தத்தில் இணைந்திருக்கும் நாடுகள் தங்களுடைய கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தை கடுமையாக குறைக்க வேண்டும் என்பதே இந்த ஒப்பந்தத்தின் சிறப்பம்சம். ஆனால் புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாட்டை குறைப்பது பொருளாதாரத்தில் நேரடியாக பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் இந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவது ஒரு சவாலான காரியமாகவே பார்க்கப்பட்டு வந்தது. இந்தியா, சீனா, ரஷ்யா, அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட 195 நாடுகள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தது.

இந்நிலையில், பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இதுகுறித்து கடந்த ஜூன் மாதமே அறிவிப்பு வெளியிட்டிருந்த அவர், தன்னுடைய இறுதி முடிவை நேற்று இரவு அறிவித்துள்ளார். இந்த முடிவிற்கு அமெரிக்காவின் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், பொருளாதார நிபுணர்கள் என பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ட்ரம்பின் சொந்த மகளான இவாங்காவும், இந்த திட்டத்திற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளார். 

இன்று உலக நாடுகள் அனைத்திற்கும் பொதுவான, முக்கியமான பிரச்சினை என்று பார்த்தால் அது உலகம் வெப்ப மயமாதல் தான். சர்வதேச அளவில் பசுமை இல்ல விளைவு வாயுக்களை வெளியிடுவதில் சீனாவிற்கு அடுத்து அமெரிக்கா இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த ஒப்பந்தத்தை பின்பற்றுவதால் தொழிற்சாலைகள், எண்ணெய் நிறுவனங்கள் உள்ளிட்டவைகள் பொருளாதார ரீதியாக பின்னடைவை சந்திக்கும் என்பதால் ட்ரம்ப் இந்த முடிவை எடுத்துள்ளார். ஆனால் ட்ரம்பின் இந்த முடிவு உலகை அழிவிற்கு அழைத்துச் செல்லும் ஒரு ஆரம்பப்புள்ளி என்பதை அவர் உணர மறுத்துள்ளார். கடந்த ஆண்டு இந்த ஒப்பந்தம் கையெழுத்தான போது அமெரிக்காவின் அதிபராக இருந்த ஒபாமா இது ஒரு "வரலாற்று திருப்புமுனை ஒப்பந்தம்" என்று வர்ணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts:

  • Money Rate Top 10 Currencies   By popularity           … Read More
  • Jobs From: myjobplus@gmail.comDate: Monday, September 08, 2014Region: Riyadh ( RIYADH )WE REQUIRED THE FOLLOWING CANDIDATES FOR OUR CLIENT.01. PROCESS … Read More
  • Salah Time Salah Time - Table suitable for Pudukkottai Dist only … Read More
  • அற்புதங்களா? அபத்தங்களா? காயல்பட்டிணத்தைச் சோர்ந்த மஹ்மூத் என்பவரால் சில ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டதே முஹ்யித்தீன் மவ்லிது. அப்துல் காதிர் ஜீலானி அவர்களை அ… Read More
  • Jobs Category: Technician Region: DammamLooking for diploma holders to work as technicians in an IT company in Dammam. The job will be for in… Read More