ஞாயிறு, 4 ஜூன், 2017

ரப்பர் டயர்களுடன் சாலையில் ஓடும் உலகின் முதல் ரயில்! June 04, 2017

ரப்பர் டயர்களுடன் சாலையில் ஓடும் உலகின் முதல் ரயில்!


சீனாவில் தண்டவாளம் இல்லாமல் சாலையிலேயே ஓடக்கூடிய வகையில் புதிய தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ள ரயிலின் வெள்ளோட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது.

மக்கள் நடமாட்டம் குறைந்த பகுதிகளில் தண்டவாளம் அமைக்காமலேயே இயக்கும் வகையில் புதிய வகை ரயிலைச் சீன ரயில்வே தயாரித்துள்ளது. இதற்காக 32 மீட்டர் நீளம் கொண்ட ரயில்பெட்டித் தொடரில் ரப்பர் டயர்கள் மாட்டப்பட்டுள்ளன. மற்ற ரயிலில் உள்ளதைப் போலவே அனைத்து வசதிகளும் இந்த ரயிலிலும் உள்ளன. இரும்புச் சக்கரத்துக்குப் பதிலாக ரப்பர் டயர்கள் மாட்டப்பட்டுள்ளன. இரும்புத் தண்டவாளத்தில் ஓடுவதற்குப் பதில் வெள்ளைக் கோடுகள் போட்ட சாலையில் இந்த ரயில் ஓடுகிறது. குறிப்பிட்ட பாதையில் ஓடும் வகையில் சாலையின் பல்வேறு இடங்களிலும் உணர்கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. 
இந்த ரயிலை சூசூ நகரில் அமைக்கப்பட்டுள்ள சாலையில் முதன்முறையாக இயக்கி வெள்ளோட்டம் பார்த்தனர். ஒரே சமயத்தில் 307 பயணிகளை ஏற்றிச் செல்லும் இந்த ரயில் மணிக்கு எழுபது கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது. மின்னாற்றலால் இயங்கக் கூடிய இந்த ரயில் 10 நிமிடம் மின்னேற்றினால் தொடர்ந்து 25கிலோமீட்டர் தொலைவு செல்லும் என்பது குறிப்பிடத் தக்கது.

Related Posts: