ஞாயிறு, 4 ஜூன், 2017

வடகொரியாவுக்கு எதிராக அடுக்கடுக்கான பொருளாதாரத்தடை! June 04, 2017

வடகொரியாவுக்கு எதிராக அடுக்கடுக்கான பொருளாதாரத்தடை!


வடகொரியாவுக்கு எதிராக மேலும் பல தடைகளை விதிப்பதற்குச் சீனாவின் ஆதரவுடன் ஐ.நா. பாதுகாப்புச் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

வடகொரியா ஏவுகணைச் சோதனைகளையும், அணு ஆயுதச்சோதனையையும் நடத்தி வருவதால் ஜப்பான், தென்கொரியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் அச்சமடைந்துள்ளன. இதனால் அந்த நாட்டுக்கு எதிராகப் பல்வேறு பொருளாதாரத் தடைகளை ஏற்கெனவே விதித்துள்ளன. உலக நாடுகள் மற்றும் ஐ.நாவின் எதிர்ப்பையும் எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல் வடகொரியா தொடர்ந்து ஏவுகணைச் சோதனைகளை நடத்தியே வருகிறது. 

இந்நிலையில், நியூயார்க்கில் நடைபெற்ற ஐ.நா. பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் வடகொரியாவுக்கு எதிராக மேலும் பல தடைகளை விதிக்கும் வகையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. கொரிய வங்கி, கொரிய ராணுவத்தின் ஏவுகணைப் பிரிவு மற்றும் 14பேருக்கு எதிராக இந்தத் தடை விதிக்கப்படுகிறது. இந்தத் தீர்மானம் அமெரிக்கா, சீனா உள்ளிட்ட பாதுகாப்புச் சபையின் 15 உறுப்பு நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

Related Posts: