2019ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு எதிராக வலுவான கூட்டணியை அமைக்க முயற்சித்து வரும் காங்கிரஸ் கட்சி சார்பில், ஆந்திர மாநிலம் குண்டூரில் தேசியத் தலைவர்கள் பங்கேற்புடன் பிரம்மாண்ட பொதுக் கூட்டம் நடைபெற்றது.
ஆந்திரா மாநிலத்தில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஒரு இடத்தில்கூட காங்கிரஸ் வெற்றி பெறவில்லை. இந்நிலையில் அம்மாநிலத்தில் கட்சியை பலப்படுத்தும் வகையிலும், 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தேசிய அளவில் பாஜகவிற்கு எதிராக வலுவான கூட்டணியை ஏற்படுத்த அச்சாரம் போடும் வகையிலும், குண்டூரில் காங்கிரஸ் சார்பில் பிரம்மாண்ட பொதுக் கூட்டம் நடைபெற்றது.
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி, சமாஜ்வாதி கட்சித் தலைவரும் உத்தரபிரதேச முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ், ஐக்கிய ஜனதாதள மூத்த தலைவர் சரத்யாதவ், இந்திய கம்யூனிஸ்ட் தேசியச் செயலாளர் டி.ராஜா, திமுக செய்தித் தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் உள்ளிட்டோர் இந்த பொதுக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
சென்னையில் கருணாநிதியின் வைர விழாவை முன்னிட்டு சனிக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், ராகுல்காந்தி, பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், உள்ளிட்ட தேசிய தலைவர்களும் பங்கேற்றனர். நாடாளுமன்ற தேர்தல் கூட்டணிக்கான அச்சாரம் இது எனக் கூறப்பட்ட நிலையில், இதேபோன்ற மற்றொரு கூட்டம் குண்டூரில் நடைபெற்றது.