திங்கள், 5 ஜூன், 2017

ஓஎன் ஜி சி நிறுவனம் குழாய்கள் பதிக்க எதிர்ப்பு கிளம்பியதால் போலீசார் குவிப்பு! June 05, 2017

ஓஎன் ஜி சி நிறுவனம் குழாய்கள் பதிக்க எதிர்ப்பு கிளம்பியதால் போலீசார் குவிப்பு!



திருவிடைமருதூர் அருகே கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி யில் எரிவாயு எடுக்க எதிர்ப்பு கிளம்பியதையடுத்து போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் வட்டத்தில் உள்ள கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் எண்ணெய் கிணறு அமைத்தால் நிலத்தடி நீர் மாசுபடுவதாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்துவந்தனர். இந்நிலையில் அந்நிறுவனம் புதிய குழாய்களை அமைக்கும் பணிகளை மேற்கொண்டது. இதற்கும் பொதுமக்கள் சார்பில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து கிராமம் முழுக்க சுமார் 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மக்கள் ஒன்று கூடிப் பேசுவதில் இருந்து எதற்கும் போலீசார் அனுமதிப்பதில்லை. சாதாரணமாக வீடுகளில் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

சிலர் வீடுகளைக் காலி செய்து விட்டு கிராமத்தை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. 

Related Posts: