தேனி மாவட்டம் பெரிய குளத்தில் அரசு விரைவுப் பேருந்து உரிய நேரத்தில் வராததால் பயணிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பயணிகளை சமாதானப்படுத்தி போராட்டத்தைக் கைவிடச் செய்தார்.
தேனி மாவட்டம் பெரியகுளத்திலிருந்து சென்னைக்கு இரவு 7 மணிக்கு அரசு விரைவுப் பேருந்து செல்வது வழக்கம். ஆனால் அந்த பேருந்து நேற்று இரவு 11 மணி வரையிலும் வராததால் இணையத்தளம் மூலம் முன் பதிவு செய்திருந்த 40 பயணிகள் கடும் அவதியடைந்தனர். இது குறித்து போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டும் உரிய பதில் வரவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் தேனி திண்டுக்கல் சாலையில் சாலைமறியலில் ஈடுபட முற்பட்டனர். அப்போது அவ்வழியாக முன்னாள் முதல்வர் ஒ,பன்னீர்செல்வம் காரில் வந்தார். அப்போது அவரை முற்றுகையிட்ட பயணிகள் தங்கள் அவதியைத் தெரிவித்தனர். இதையடுத்து அவர்களை சமாதானப்படுத்திய ஓ.பன்னீர்செல்வம், தேனி போக்குவரத்து பணிமனையில் இருந்து பேருந்து வர ஏற்பாடு செய்வதாகக் கூறினார். இதனைத் தொடர்ந்து சாலைமறியலை அவர்கள் கைவிட்டனர். பின்னர் இரவு 11.30 மணி அளவில் பேருந்து வந்து சென்னை செல்லும் பயணிகளை ஏற்றிச் சென்றது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.