செவ்வாய், 6 ஜூன், 2017

தண்ணீரைச் சுரண்டும் அதானியின் சூரிய மின் உற்பத்தி மையம்! June 06, 2017

தண்ணீரைச் சுரண்டும் அதானியின் சூரிய மின் உற்பத்தி மையம்!


தமிழகத்தின் கமுதி பகுதியில், தொழிலதிபர் அதானிக்கு சொந்தமான சூரிய மின் உற்பத்தி மையம் தினமும் லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீரை உறிஞ்சி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இதனால் கமுதியை சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் முற்றிலுமாக காணாமல் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இனி காணலாம்...

நிலத்தடி நீரை உறிஞ்சும் அதானியின் ஆலை

➤ கமுதியில் 2,500 ஏக்கர் பரப்பில் உலகின் மிகப் பெரிய சூரிய மின் உற்பத்தி மையம் இயங்கி வருகிறது.

➤ கெளதம் அதானிக்கு சொந்தமான இந்த ஆலையில் இருந்து 648 மெகா வாட் ஆற்றல் உற்பத்தி. 

➤ மின் உற்பத்திக்காக 25 லட்சம் சூரிய ஆற்றல் தகடுகள் இங்கு பயன்படுத்தப்படுகின்றன.

➤ சூரிய மின் உற்பத்தி தகடுகளை சுத்தம் செய்ய தினசரி 2 லட்சம் லிட்டர் தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது.

➤ தகுந்த அனுமதி பெறாமல் கோட்டை மேடு ஆழ்துளைக் கிணறுகளில் தண்ணீரை உறிஞ்சுவதாக புகார் எழுந்துள்ளது.

Related Posts: