புதன், 7 ஜூன், 2017

பொதுக்கழிப்பறையில் மது அருந்தியதை தட்டி கேட்ட இளைஞர் குத்திக் கொலை! June 07, 2017

டெல்லியில்  பொதுக்கழிப்பறையில் மது அருந்தியதை தட்டி கேட்ட இளைஞர் குத்தி கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 

டெல்லியில் நங்லோய் பகுதியில் உள்ள பொதுக்கழிப்பறையில் இளைஞர்கள் சிலர் மது அருந்தி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனை அப்பகுதியை சேர்ந்த ராகுல் என்ற இளைஞர் தட்டி கேட்டதாக கூறப்படுகிறது. 

இதனால் ஆத்திமடைந்த அந்த இளைஞர்கள் ராகுலை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரும் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து 3 பேரையும் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது