புதன், 7 ஜூன், 2017

குடியரசு தலைவர் தேர்தலுக்கான தேதி அறிவிப்பு! June 07, 2017




குடியரசுத்தலைவர் தேர்தல் ஜூலை 17-ம்  தேதி நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

 குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வருகின்ற ஜூலை 24 ம் தேதியுடன் முடிவடைகிறது.  இதனை அடுத்து, டெல்லியில் இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி, புதிய குடியரசு தலைவரை தேர்வு செய்வதற்கான அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதன்படி, குடியரசுத்தலைவர் பதவி தேர்தலுக்கான  வேட்பு மனு தாக்கல் ஜூன் மாதம் 14ம் தேதி தொடங்கும் என்றும், வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஜூன் 28 என்றும் அவர் குறிப்பிட்டார். ஜூன்  29 ம் தேதி வேட்பு மனுக்கள் பரீசிலனை  நடைபெறும் எனவும் நஜீம் ஜைதி கூறினார் . வேட்புமனுக்களை திரும்ப பெற ஜூலை மாதம் 1ம் தேதி கடைசி நாள் ஆகும். 
குடியரசு தலைவர் பதவிக்கான தேர்தல் ஜூலை மாதம் 17ம் தேதி நடைபெறும் என்றும்  வாக்கு எண்ணிக்கை ஜூலை 20ம் தேதி டெல்லியில்  நடைபெறும் என்றும் தலைமை தேர்தல் ஆணையர்  நஜீம் ஜைதி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Related Posts: