புதன், 7 ஜூன், 2017

ஜெயகுமார் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் : நாஞ்சில் சம்பத் June 07, 2017

அமைச்சர் ஜெயகுமார் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் இல்லையேல் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் தவிர்க்க முடியாத தலைவர் டிடிவி தினகரன் என்றும், ஜனநாயகக் காற்று அவர் பக்கமே வீசுவதாகவும் தினகரன் ஆதரவாளரான நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். நியூஸ் 7 தமிழ் கேள்வி நேரத்தில் பங்கேற்றுப் பேசிய நாஞ்சில் சம்பத், எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு தினகரனால் ஆபத்து வராது என்றும் தெரிவித்துள்ளார்.

தினகரனை ஒதுங்கி இருக்க வேண்டுமென கூறிய அமைச்சர் ஜெயகுமார் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என நாஞ்சில் சம்பத் வலியுறுத்தினார். பேச்சை திரும்பப் பெறாவிட்டால் ஜெயக்குமார் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

Related Posts: