6 11 2021 வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெய்க்கு விதிக்கப்படும் 2.5% சுங்கவரி முழுவதுமாக நீக்கப்படுகிறது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
பெட்ரோல், டீசலை விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்ததை அடுத்து விமர்சனங்கள் எழுந்தது. இதையடுத்து, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மத்திய அரசு பெட்ரோல், டீசலுக்கான கலால் வரியை லிட்டருக்கு பெட்ரோல் 5 ரூபாயும் டீசல் 10 ரூபாய் குறைத்து அறிவித்தது. அதே போல, இந்தியாவில் சமையல் எண்ணெய்களின் விலை உச்சத்தை தொட்டு விற்பனையானது.
கடந்த 2020ம் ஆண்டு தொடக்கத்தில் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட சமையல் எண்ணெய் இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் ரூ.180-ஐத் தொட்டது.
இந்த நிலையில், சமையலுக்கு பயன்படுத்தப்படும் அத்தியாவசிய சமையல் எண்ணெய்களான பாமாயில், சூரியகாந்தி எண்ணெய், சோயாபீன் எண்ணெய் இறக்குமதி மீதான 2.5% சுங்கவரி முழுவதுமாக நீக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. சமையல் எண்ணெய்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு நடவடிக்கையை மேற்க்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
source https://tamil.indianexpress.com/india/union-government-removed-custom-taxes-for-imported-edible-oil-365329/