ஞாயிறு, 7 நவம்பர், 2021

சென்னையில் விடிய விடிய கொட்டிய கனமழை

 

வங்கக் கடலில் நவம்பர் 9 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும், இதனால் தமிழகத்தில் 4 நாட்களுக்கு அனேக இடங்களில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், சென்னையில் நேற்று நள்ளிரவு இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்ய தொடங்கியுள்ளது. எழும்பூர், சென்னை சென்ட்ரல், புரசைவாக்கம், அண்ணாநகர், சைதாப்பேட்டை உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் விடிய விடிய மழை பெய்ததால் சாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

குறிப்பாக போரூர், மதுரவாயல், பூந்தமல்லி, மதுரவாயல், குன்றத்தூர், வளசரவாக்கம், ஆவடி பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

நந்தம்பாக்கம், சிந்தாதிரிப்பேட்டை, எழும்பூர், கோயம்பேடு, வடபழனி பகுதிகளில் லேசான மழையும் மழை, கோடம்பாக்கம், தி.நகர், நசரத்பேட்டை,மாங்காடு, மீனம்பாக்கம், கிண்டி பகுதிகளில் கனமழையும் பெய்து வருகிறது. அதிகாலையும் மழை நீடிப்பதால் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

சென்னை தியாகராய நகர் கிரியப்பா சாலையில் (GRT Grand Backside) மழைநீர் வீடுகளுக்குள் புகுந்தது. சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை காரணமாக சாலைகள் வெள்ளக்காடானது.பல்வேறு வீடுகளில் வெள்ளம் புகுந்ததால் குடியிருப்புகள் தீவுகள் போல் மாறியது.

சென்னை மட்டுமின்றி மேலும் புறநகர் பகுதிகளான அம்பத்தூர், ஆவடி, எண்ணூர், தாம்பரம், வண்டலூர், திருமழிசை ஆகிய பகுதிகளிலும் இரவு முதல் கனமழை பெய்தது. இதனால் முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. அதே போல, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தாம்பரம் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

அதிகபட்சமாக வில்லிவாக்கத்தில் 16 சென்டி மீட்டரும், நுங்கம்பாக்கத்தில் 14 சென்டி மீட்டரும் மழை பெய்துள்ளது.

தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் பலத்த மழை முதல் மிக பலத்த மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/heavy-rain-in-chennai-flood-in-most-areas-365694/

Related Posts: