திங்கள், 3 ஜூலை, 2017

குழந்தைகளை உங்களால் பராமரிக்க முடிய வில்லை என்றாலும் பராவா இல்லை அவர்களை நல்ல காப்பகத்தில் சேர்கலாமே

இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் உண்டாகட்டுமாக 
மேலப்பாளையம் சந்தை ரவுண்டாணாவில் இரண்டு நாளாக இவரை பார்கிறேன் இன்று அருகில் சென்று விசாரித்தேன் இவர் பெயர் விஜயராகவன் கண் பார்வை இல்லாதவர் தச்சநல்லூரில் ஓரு காப்பகத்தில் இருந்துவருகிறார் சுதன் என்பவர் இவரை போன்வர்களை வைத்துக்கொண்டு காப்பகம் என்ற பெயரில் பிச்சை எடுக்க வைத்து பிளைப்பு நடத்துகிறார் இதில் வேதணை என்னவென்றால் மாலை 4 மணிக்கு சாலை ஓரத்தில் அமர வைக்கப்படும் இவர்கள் இரவு 12:30 மணிக்குதான் அழைத்து செல்ல படுகிறார் மணி தற்ப்போது 12 மணி நான் அவரோடு உறையாடி கொண்டு இருக்கிறேன் உணவு வேண்டுமா என்று கேட்டேன் யாரோ ஓருவர் வாங்கி கொடுத்தாராம் சாப்பிட்டேன் என்றார் இன்னும் அரைமணி நேரம் இருக்கு கிளம்ப என்றார் எப்படி மணி உங்களுக்கு தெரியும் என கேட்டேன் கையில் அணிந்திருந்த கடிகாரத்தில் ஒரு பொத்தானை அழுத்தினார் நேரத்தை சொல்கிறது அவருக்கு உதவ முடியவில்லையே என்ற வருத்தத்துடன் நகர்ந்தேன் பெற்றோர்களே இது போன்ற குழந்தைகளை உங்களால் பராமரிக்க முடிய வில்லை என்றாலும் பராவா இல்லை அவர்களை நல்ல காப்பகத்தில் சேர்கலாமே... இவர்கள் காப்பாட்ற பட வேண்டும் மதன் போன்றோர் தண்டிக்க பட வேண்டும்...
by அரபி ஞானியார்

Related Posts: